பெஸ்ட் இன்டிரியர் விருதை பெற்ற ஆடம்பர படகு!

By Saravana

கடந்த மாதம் 24ந் தேதி முதல் 27ந் தேதி வரை மொனாகோவில் படகு திருவிழா நடந்தது. அதில், ஏராளமான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தன.

இந்த நிலையில், இந்த படகு திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த Motor Yacht J'Ade என்ற படகு சிறந்த இன்டிரியர் டிசைனுக்கான விருதை பெற்றது. ஆடம்பரம் ததும்பும் அந்த படகின் படங்களையும், கூடுதல் தகவல்களையும், ஸ்லைடரில் காணலாம்.


தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

இத்தாலியை சேர்ந்த சிஆர்என் படகு தயாரிப்பு நிறுவனமும், ஸ்டூடியோ ஸூக்கான் இன்டர்நேஷனல் என்ற வடிவமைப்பு நிறுவனமும் இணைந்து இந்த படகை வடிவமைத்தன.

வசதி

வசதி

60 மீட்டர் நீளமுடைய இந்த ஆடம்பர படகில் 10 விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளன. இதேபோன்று, 13 பணியாளர்களும் தங்க முடியும்.

ஸ்பீட் போட்

ஸ்பீட் போட்

இந்த ஆடம்பர படகில் 8 மீட்டர் நீளம் கொண்ட ரிவா இசியோ என்ற அதிவேக படகும் நிறுத்தப்பட்டுள்ளது.

பெரிய ஜன்னல்கள்

பெரிய ஜன்னல்கள்

இந்த ஆடம்பர படகின் அறைகளிலிருந்து வெளிப்புற அழகை ரசித்துச் செல்வதற்கு ஏற்றவாறு பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

நீச்சல் குளம்

நீச்சல் குளம்

இந்த ஆடம்பர படகில் சிறிய நீச்சல் குளமும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஆடம்பர படுக்கைறைகள், உடற்பயிற்சி கூடம், உணவுக்கூடம் என ஆடம்பர ஓட்டலுக்கு இணையான வசதிகள் உள்ளன. இந்த படகில் 18,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்கும் வசதியும் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஆடம்பர படகில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின்கள் அதிகபட்சமாக 2010எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டவை. அதிகபட்சமாக மணிக்கு 16 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 6, 2014, 15:26 [IST]
English summary
CRN 125 M/Y J’Ade is the world’s first super yacht designed by Studio Zuccon International along with CRN technical Office and CRN Centro Stile was nominated for Best Interiors at 2014 Monaco Yacht Show which ran 24th-27th September 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+