இந்திய ஆட்டோமொபைல் துறையின் சிலிர்க்க வைக்கும் சுவாரஸ்ய புள்ளிவிபரங்கள்!!

Posted By:

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய வாகனத் துறை, அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வாகன துறைகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்த வளர்ச்சி விகிதத்திற்கும், தற்போதைய நிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய வாகனத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் புள்ளிவிபரங்களிலிருந்து கிடைத்த சில சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. பத்துக்கு எட்டு...

01. பத்துக்கு எட்டு...

இந்தியாவில், 2014- 15ம் ஆண்டு நிதியாண்டு காலத்தில் 1.60 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதில், பத்து வாகனங்களில் எட்டு இருசக்கர வாகனங்கள் ஹீரோ, ஹோண்டா அல்லது பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளாக இருக்கின்றன. அதாவது, 1.25 கோடி இருசக்கர வாகனங்களை இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளன.

02. இரண்டில் ஒன்று...

02. இரண்டில் ஒன்று...

இந்தியாவில் விற்பனையாகும் இரண்டு ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டின் பங்களிப்பில் பாதிக்கு பாதி என்ற விகிதத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 2,29,382 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

03. விற்பனையில் மாருதியும், ஃபியட்டும்...

03. விற்பனையில் மாருதியும், ஃபியட்டும்...

2014- 15ம் நிதி ஆண்டில் இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனம் இந்தியாவில், 10,380 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே காலத்தில் மாருதி நிறுவனம் 11,70,702 கார்களை விற்பனை செய்துள்ளது. இதனை ஒப்பிடும்போது, ஃபியட் நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனை, மாருதியின் மூன்று நாட்களுக்கான விற்பனைக்கு சமமாகிறது.

04. மாருதி கார் விற்பனை

04. மாருதி கார் விற்பனை

ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு கார்களை மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. சராசரியாக 30 வினாடிகளுக்கு ஒரு கார் என்ற அளவில் மாருதியின் விற்பனை உள்ளது. இந்த தகவலை படிப்பதற்குள் ஒரு மாருதி கார் விற்பனையாகியிருக்கும்.

05. டூ வீலர் உற்பத்தி

05. டூ வீலர் உற்பத்தி

இந்தியாவில் ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு இருசக்கர வாகனம் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவருகிறது. அதாவது, ஒரு நிமிடத்தில் 30 இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 07. சுதேசியான விதேசி எஞ்சின்

07. சுதேசியான விதேசி எஞ்சின்

இந்தியாவில் விற்பனையாகும் வெவ்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களின் 13 கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தேசிய எஞ்சின் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, சியாஸ் போன்ற அதிகம் விற்பனையாகும் மாருதி கார்களிலும், மான்ஸா, விஸ்டா, போல்ட், ஸெஸ்ட் ஆகிய டாடா கார்களிலும், புன்ட்டோ எவோ, அவென்ச்சுரா, லீனியா ஆகிய ஃபியட் கார்களிலும், செவர்லே செயில், செயில் செடான் மற்றும் என்ஜாய் மற்றும் பிரிமியர் ரியோ ஆகிய கார்களிலும் ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் உயிர் கொடுத்து வருகிறது. இதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் செவர்லே பீட் டீசல் காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் என்பதையும் குறிப்பிட வேண்டும். இன்று விற்பனைக்கு வரும் மாருதி பலேனோ காரின் டீசல் மாடலிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

08. கார் விகிதாச்சாரம்

08. கார் விகிதாச்சாரம்

1995ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் 3,186 பேருக்கு ஒரு கார் என்ற விகிதாச்சாரம் இருந்தது. ஆனால், தற்போது 481 பேருக்கு ஒரு கார் என்ற அளவில் விகிதாச்சாரம் மிக வேகமாக குறைந்துள்ளது.

09. மூன்றுசக்கர வாகனம்

09. மூன்றுசக்கர வாகனம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மூன்று சக்கரவாகனங்களில் இரண்டில் ஒன்று பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்பாக உள்ளது. கடந்த ஆண்டு 4,32,234 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதில், 2,34,345 மூன்று சக்கர வாகனங்கள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Interesting Statistic Facts About The Indian Automotive Industry.
Please Wait while comments are loading...

Latest Photos