குழந்தைசாமியை தெறிக்கவிட்ட அமெரிக்காவின் பி - 52 போர் விமானத்தின் சிறப்புகள்!

By Saravana

பேரழிவை ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வடகொரியா சமீபத்தில் அறிவித்தது. இந்த குண்டு பரிசோதனையால், கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் உலக நாடுகளே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு கண்டனங்களும் விடுக்கப்பட்டன. ஆனால், இதனையெல்லாம் வடகொரியா கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில், வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது ஆற்றல் வாய்ந்த பி-52 குண்டு வீச்சு போர் விமானத்தை தென்கொரிய வான்பரப்பில் பறக்கவிட்டது. இதனால், அந்த பிராந்தியத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. மேலும், அமெரிக்காவின் பி-52 என்ற அந்த போர் விமானம் தென்கொரியாவின் பெயோங்டேக் நகரில் பறக்கவிடப்பட்டதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவை அச்சுறுத்தி வரும் அமெரிக்காவின் பி-52 போர் விமானத்தின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

அமெரிக்காவின் போர் அஸ்திரம்

அமெரிக்காவின் போர் அஸ்திரம்

அமெரிக்காவின் ராணுவ பலத்தை பரைசாற்றுவதில் பி-52 முக்கிய பங்காற்றுகிறது. பிற நாடுகளை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் போர் தந்திரங்களில் இந்த பி-52 விமானம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏன் முக்கியத்துவம்

ஏன் முக்கியத்துவம்

எதிரி நாட்டு சிக்காமல் இருப்பதற்காக, பொதுவாக போர் விமானங்களுக்கான எரிபொருள் அளவு குறைவாக இருக்கும். தேவைப்படும்போது மேலே பறக்கும்போதே பிற விமானங்களிலிருந்து எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த பி-52 விமானம் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 19,300 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும் திறந் கொண்டது. போர் சமயங்களில் 8,000 கிமீ தூரம் வரை பயன்படுத்த முடியும். அது மட்டுமா?

குண்டு மழை

குண்டு மழை

இது பிற போர் விமானங்களை போன்று குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசாது. ஆம், இந்த விமானம் இடைவெளி இல்லாத அளவுக்கு குண்டு மழை பொழியும் திறன் கொண்டது. சரி, ஒரு விமானத்தை வைத்து என்ன செய்ய முடியும் என்ற உங்களது கேள்விக்கு பதில் அடுத்த ஸ்லைடில்.

பயன்பாடு

பயன்பாடு

1952ல் அறிமுகம் செய்யப்பட்டு 1955ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இந்த விமானம் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது 58 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், 18 விமானங்கள் ரிசர்வில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மொத்தம் 744 பி-52 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வேகம் குறைவு

வேகம் குறைவு

இதுபோன்ற கனரக போர் விமானங்கள் எதிரிகளின் கண்களில் பட்டு எளிதாக சுட்டு வீழ்த்திவிட வாய்ப்புண்டு. அதற்காக, பல தற்காப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் மணிக்கு 1,000 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. பிற போர் விமானங்களை ஒப்பிடும்போது வேகம் குறைவு என்பதால், பல சமயங்களில் இலகு எடை போர் விமானங்கள் புடைசூழ பயிற்சியில் ஈடுபடுவது வாடிக்கை.

அணுகுண்டு

அணுகுண்டு

இந்த போர் விமானத்தில் 31,500 கிலோ எடையுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல முடியும். மேலும், அணுகுண்டுகளையும் எடுத்துச் சென்று எதிரி நாடுகளை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டது. இதன் தயாரிப்பு நோக்கமே அதுதான்.

வடிவம்

வடிவம்

இந்த விமானம் 159 அடி நீளமும், 185 அடி அகலமும், 40.8 அடி உயரமும் கொண்டது. 2.20 லட்சம் கிலோ எடைகொண்டது.

ஓய்வு பேச்சுக்கே இடமில்லை...

ஓய்வு பேச்சுக்கே இடமில்லை...

பல ஆண்டுகள் பழமையான விமானங்கள் ஓய்வு கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், 1952ல் அறிமுகம் செய்யப்பட்ட பி-52 போர் விமானம், வரும் 2040ல்தான் ஓய்வு பெற இருப்பதை கணக்கில்கொள்ள வேண்டும்.

பல போர்களை பார்த்த விமானம்

பல போர்களை பார்த்த விமானம்

தரை இலக்குகளை குறிவைத்து குண்டு மழை பொழிவதில் மட்டுமல்ல. வான் தாக்குதல்களிலும் வல்லமை பொருந்தியது. பல போர்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. வியட்நாம் போரின்போது வடக்கு வியட்நாம் நாட்டின் மிக்-21 ரக போர் விமானங்களை வானிலேயே சுட்டு வீழ்த்தி தனது பராக்கிரமத்தை நிரூபித்தது. ஆனாலும், 15 பி-52 விமானங்களை வியட்நாம் சுட்டு வீழ்த்தியதும் குறிப்பிட வேண்டும்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த போர் விமானத்தில் கமான்டர், பைலட், ரேடார் இயக்குபவர் என 5 வீரர்கள் பணியாற்றுவர். அவசர சமயத்தில் அனைவருமே எஜெக்ட் இருக்கை மூலமாக வெளியேற முடியும். கீழ் அடுக்கில் இருவர் கீழ்புறமாகவும், மேலடுக்கில் இருக்கும் மூவர் மேல்புறமாகவும் வெளியேற முடியும்.

ஏவியோனிக்ஸ்

ஏவியோனிக்ஸ்

நாசா விண்வெளி ஓடத்தில் பயன்படுத்தப்படும் ஐபிஎம்- ஏபி-101 ஏவியோனிக்ஸ் கம்ப்யூட்டர்தான் இந்த விமானத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

இரண்டு பி-52 விமானங்களை கொண்டு 3.64 லட்சம் சதர கிலோமீட்டர் கடற்பரப்பை கண்காணிக்க முடியும். அந்தளவுக்கு நவீனமான ரேடார் சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த விமானத்தில் பிராட் அன்ட் ஒயிட்னி நிறுவனத்தின் ஜே57-பி29டபிள்யூ ரகத்தை சேர்ந்த 8 டர்போபுரோப் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு எஞ்சினும் 17,000 பவுண்ட் த்ரஸ்ட் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

ஒரு விமானம் மதிப்பு 84 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போர் தந்திர முறை

போர் தந்திர முறை

நமக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு ரெண்டு கண்களும் போய்விட வேண்டும் என்ற கொள்கையுடன், எதிரி நாட்டு ஆயுத கிடங்களை அழித்து பலத்தை குறைப்பதை நோக்கமாக கொண்ட போர் தந்திர முறையில் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.

பேரழிவு ஆயுதம்

பேரழிவு ஆயுதம்

உலக ராணுவ வரலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களில் இந்த போர் விமானத்தையும் முக்கியமானதாக குறிப்பிடுகின்றனர். இதுவே, வடகொரியாவுக்கு நெஞ்சில் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தற்போது ஆயுத பலத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக வடகொரியா இன்று அறிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 13, 2016, 14:01 [IST]
English summary
Some Interesting Things About Boeing B-52 Bomber.
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+