ரஷ்யா தயாரிக்கும் ஹைப்பர்சானிக் ராணுவ விமானம் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

By Saravana

உலகின் எந்தவொரு இடத்திற்கும் சில மணிநேரத்தில் சென்றடையக்கூடிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சானிக் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை ரஷ்யா கையிலெடுத்துள்ளது. இந்த விமானம் எப்படியிருக்கும் என்பதற்கான கான்செப்ட் மாடலின் படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

'Pak Ta' என்ற குறியீட்டுப் பெயரில் தயாரிக்கப்படும் இந்த விமானம் ராணுவ பயன்பாட்டிற்கான விசேஷ அம்சங்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்ட இந்த விமானத்தை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ரொம்ப ஃபாஸ்ட்

01. ரொம்ப ஃபாஸ்ட்

வெறும் 7 மணிநேரத்திற்குள் உலகின் எந்தவொரு இடத்திற்கும் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் இந்த விமானம் கொண்டு சேர்த்துவிடும்.

02. ஹைபிரிட் மாடல்

02. ஹைபிரிட் மாடல்

பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் நுட்பம் கொண்ட விமானமாக இதனை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், இந்த பிரம்மாண்ட விமானத்தில் பேட்டரிகள் மற்றும் மின்மோட்டார்களில் இயங்கும் தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்துவதில் கடும் சவால்கள் உள்ளன.

03. எடை தூக்கும் திறன்

03. எடை தூக்கும் திறன்

இந்த விமானம் அதிகபட்சமாக 200 டன் வரை எடையை தூக்கிக் கொண்டு பறக்கும்.

 04. வேகம்

04. வேகம்

இந்த பிரம்மாண்ட விமானம் மணிக்கு 2,000 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது.

05. ரேஞ்ச்

05. ரேஞ்ச்

இடைநிற்காமல் 7,000 கிமீ தூரம் வரை இந்த விமானம் பறக்கும். எனவே, உலகின் எந்தவொரு இடத்தையும் 7 மணிநேரத்தில் சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

06. இடவசதி

06. இடவசதி

இந்த விமானத்திற்குள் ஏராளமான அர்மதா டாங்கிகளையும், அதற்குண்டான வெடிப்பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியும்.

 07. அறிமுகம் எப்போது?

07. அறிமுகம் எப்போது?

வரும் 2024ம் ஆண்டில் இந்த விமான தயாரிப்பு நிறைவடைந்து அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

08. ராணுவ பலம்

08. ராணுவ பலம்

எதிரி நாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலை குறைத்துக் கொள்ளும் விதத்தில், இந்த ராணுவ விமான திட்டத்தை ரஷ்யா கையிலெடுத்துள்ளது. மேலும், உலகின் எந்த ஒரு மூலையிலும், சில மணிநேரத்தில் தற்காலிக ராணுவ தளத்தை அமைக்கும் விதத்தில் இந்த விமானத்தை தயாரிக்க அந்நாடு திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
According to a new design specification from the Military-Industrial Commission in Moscow, a transport aircraft, dubbed PAK TA, will fly at supersonic speeds (up to 2,000 km/h) and will boast an impressively high payload of up to 200 tons. It will also have a range of at least 7,000 kilometers.
Story first published: Wednesday, April 1, 2015, 14:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X