ஹார்மோனி ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பலில் பயணிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!

Written By:

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் என்ற பெருமையை ஹார்மோனி ஆஃப் தி சீஸ் பெற்றிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்களும், பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன.

இந்த நிலையில், இந்த கப்பலில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள், வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கப்பலில் பயணித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த விஷயங்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. பயோனிக் பார்

01. பயோனிக் பார்

பயோனிக் பாரில் இரண்டு ரோபோக்கள் மூலமாக கண்ணாடி குவளைகளில் மது ஊற்றி பரிமாறப்படும். இது மது பிரியர்களை வெகுவாக கவரும் அம்சமாக இருக்கும்.

02. ஃப்ளோ ரைடர்

02. ஃப்ளோ ரைடர்

நீர் சறுக்கு மேடையில் சிறிய பலகையில் சறுக்கி விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஃப்ளோரைடர் நிச்சயம் ஒவ்வொருவரையும் பரவசமூட்டும். மணிக்கணக்கில் ஆடினாலும் சலிப்பு தட்டாது.

03. க்ரேஸி கோல்ஃப்

03. க்ரேஸி கோல்ஃப்

கோல்ஃப் மைதானம் எத்தனை பரந்துவிரிந்ததாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், நடுக்கடலில் ஒரு கோல்ஃப் மைதானத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதுபோன்ற கோல்ஃப் விளையாட்டு பிரியர்களுக்காக இந்த கப்பலில் சிறிய அளவிலான கோல்ஃப் மைதானம் ஒன்றும் உள்ளது.

04. அல்டிமேட் அபிஸ்

04. அல்டிமேட் அபிஸ்

உலக அளவில் கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும் அதி உயரமான சறுக்கு மேடையாக இது குறிப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் வளைவு நெளிவாக மேலிருந்து கீழே இறங்கும் ராட்சத குழாயில் பயணித்து வெளியேறும்போது, செம த்ரில்லான அனுபவத்தை பெற முடியும்.

 05. ரைசிங் டைட்

05. ரைசிங் டைட்

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலின் நடு மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பார் ஒன்றை Rising tide என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். அதாவது, இந்த பார் திறந்தவெளியாக இருப்பதுடன், மூன்று தளங்களுக்கு இடையில் மேலும், கீழுமாக செல்லும். இந்த பாரில் பயணிக்க கூட்டம் க்யூ கட்டும் என்று அடித்து கூறுகின்றனர். மது பிரியர்களுக்கு இது புதுமையான அனுபவத்தை வழங்கும்.

06. டேபிள் டென்னிஸ்

06. டேபிள் டென்னிஸ்

பொழுதுபோக்கு தவிர்த்து, விளையாட்டு நிகழ்வுகளுக்கும் பஞ்சமிருக்காது. ஆம், இந்த கப்பலில் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான அரங்கமும் உள்ளது.

 07. கூடைப் பந்தாட்டம்

07. கூடைப் பந்தாட்டம்

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலில் கூடைப்பந்தாட்ட மைதானமும் உள்ளது. இது திறந்தவெளி மைதானமாக, மேல்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கோல்ஃப் மைதானத்திற்கு எதிர்புறத்தில் அமைந்துள்ளது.

08. பர்ஃபெக்ட் ஸ்டார்ம்

08. பர்ஃபெக்ட் ஸ்டார்ம்

அல்டிமேட் அபிஸ் என்ற சறுக்கு மேடை தவிர்த்து, சைக்ளோன், தைபூந், சூப்பர்செல் என்று மூன்றுவிதமான நீர் சறுக்கு விளையாட்டு மேடைகளும் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நீர் சறுக்கு விளையாட்டில் திளைத்து நிற்பது உறுதி.

09. ஸிப் லைன்

09. ஸிப் லைன்

உலகின் இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் கம்பி வடத்தில் சறுக்கி செல்லும் விளையாட்டும் உள்ளது. கப்பலின் 16 வது தளத்திலிருந்து 9வது தளத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வடத்தில் தொங்கிக் கொண்டு செல்வது மயிர் கூச்சரிய செய்யும் விஷயமாக இருக்கும்.

 10. மலையேற்றம்

10. மலையேற்றம்

மலையேற்ற பிரியர்களை குஷிப்படுத்தும் விதத்தில், இந்த கப்பலில் மலையேற்ற சுவர் ஒன்றும் உள்ளது. 40 அடி உயரமான இந்த சுவரில் மலையேற்றம் செய்யும் முயற்சி நிச்சயம் த்ரில்லாக அமையும்.

11. சென்ட்ரல் பார்க்

11. சென்ட்ரல் பார்க்

இந்த கப்பலின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பூங்காவில் 12,000 செடி, கொடிகள், மரங்கள் உள்ளன. இது நிச்சயமாக கப்பலில் இருக்கிறோம் என்ற உணர்வை மறக்கச் செய்யும் என்பதோடு, மன பாரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் இருக்கும்.

12. நடன இசை நிகழ்ச்சி

12. நடன இசை நிகழ்ச்சி

சொகுசு கப்பல்களில் இரவு வேளைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில், இந்த கப்பலில் இரவு கேளிக்கை நிகழ்ச்சிகளும் உண்டு. பாப் இசை கலைஞர்களின் குரலும், நடனமும் அனைவரையும் மயக்கச் செய்யும். இதற்கான அரங்கத்தில் 1,300 பேர் வரை அமரலாம்.

13. ஜாஸ் பார்

13. ஜாஸ் பார்

இந்த கப்பலின் நகைச்சுவை நிகழ்வு அரங்கத்திற்கு எதிரில் ஜாஸ் பார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இசையை காதுகளில் ரசித்துக் கொண்டே மதுவை ருசிக்கலாம். மிக அமைதியான சூழலில் மனதிற்கினிய இசையை ரசித்துக் கொண்டே மது குடிப்பதற்கு உலகிலேயே மிகச்சிறந்த இடமாக இது இருக்கும் என்று கப்பல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

14. ஸ்டூடியோ பி

14. ஸ்டூடியோ பி

இந்த கப்பலில் ஸ்கேட்டிங் பிரியர்களுக்காக பிரத்யேக பனிச் சறுக்கு அரங்கம் உள்ளது. அதில், பனிக்கட்டி படர்ந்த தளத்தில் சறுக்கி விளையாடலாம் என்பதோடு, அங்கு ஸ்கேட்டிங் செய்து நடனமாடும் கலைஞர்களின் நிகழ்ச்சியையும் கண்டு களிக்கலாம். ஸ்கேட்டிங் செய்ய விருப்பமில்லாதவர்கள் அல்லது தெரியாதவர்களுக்காக அரங்கத்தின் உள்ளே சுற்றிலும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

15. அக்வா தியேட்டர்

15. அக்வா தியேட்டர்

கப்பலின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மிக பிரம்மாண்டமான அக்வா தியேட்டர் என்ற அரங்கத்தில் நீரில் நடந்தபடி செய்யும் சாகச நிகழ்ச்சிகள் பலரையும் கவரும். 600 பேர் அமரும் வசதி கொண்ட இந்த அரங்கத்தில்தான் இந்த கப்பலை டெலிவிரி கொடுக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது நினைவிருக்கலாம்.

16. வூம்

16. வூம்

நடுக்கடலில் செல்லும்போதும் அதிவேக இன்டர்நெட் வசதியும் கிடைக்கும். இதனை வூம் என்று குறிப்பிடுகின்றனர். கப்பலில் பயணிக்கும் 6,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்த வசதியை பெற முடியும். பணியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதி உண்டு.

 17. சொகுசு அறைகள்

17. சொகுசு அறைகள்

இந்த கப்பலில் 6780 விருந்தினர்கள் பயணிப்பதற்காக 2,747 சொகுசு அறைகள், 23 நீச்சல் குளங்கள், 20 ரெஸ்ட்டாரண்டுகள், சூதாட்ட விடுதி, ஷாப்பிங் கடைகள், 42 பார்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன. கடலை கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அறைகளுக்கு கட்டணம் அதிகமாக இருக்கும்.

18. பிரம்மாண்டம்

18. பிரம்மாண்டம்

1,188 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 18 அடுக்குகளை கொண்டதாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது கடலில் மிதக்கும் நகரமாகவே காட்சியளிக்கிறது. இதில் பயணித்தோம் என்பதே வாழ்நாள் முழுவதும் தித்திக்கும் நினைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலின் விபரங்கள்!

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலின் விபரங்கள்!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Mesmerizing reasons to go on the world's largest cruise ship.
Story first published: Friday, May 27, 2016, 12:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more