டைட்டானிக் கப்பல் மற்றும் விபத்து தொடர்பான அரிய புகைப்படங்கள்!

By Saravana

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோக நிகழ்வுகளில் ஒன்று டைட்டானிக் சொகுசு கப்பல் விபத்து. 700 பேர் உயிர் பிழைத்தாலும் 1,517 பேரின் உயிரை காவு வாங்கிய இந்த கப்பல் விபத்து காலத்துக்கும் அழியா வடுவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வெளியான டைட்டானிக் ஹாலிவுட் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், டைட்டானிக் கப்பல் தொடர்பாக, விபத்துக்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆபத்தை நோக்கிய பயணம்

ஆபத்தை நோக்கிய பயணம்

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ந் தேதி இங்கிலாந்திலுள்ள சவுதம்ப்டன் துறைமுகத்திலிருந்து டைட்டானிக் கப்பல் பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

Photo credit: www.dailymail.co.uk

நியூயார்க் நோக்கி...

நியூயார்க் நோக்கி...

பேராபத்தை அறியாமல் நியூயார்க் நகரை நோக்கி பயணிக்கும் டைட்டானிக் கப்பல்.

Photo credit: felbert.livejournal.com

கப்பல் கட்டும் தளம்

கப்பல் கட்டும் தளம்

வடக்கு அயர்லாந்து நாட்டின் பெல்ஃபாஸ்ட் நகரிலுள்ள ஹார்லேண்ட் அண்ட் வோல்ஃப் கப்பல் கட்டும் தளத்தில் டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டது. அந்த கப்பல் கட்டும் தளத்திலிருநது வேலை நேரம் முடிந்து வெளியேறும் தொழிலாளர்கள்.

Photo credit: www.nmni.com Read

டைனிங் ஹால்

டைனிங் ஹால்

டைட்டானிக் கப்பலின் சொகுசை பரைசாற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கான சாப்பாட்டுக்கூடம்.

Photo credit: www.boston.com

இதுவும் டைனிங் ஹால்தான்...

இதுவும் டைனிங் ஹால்தான்...

இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான சாப்பாட்டுக்கூடம்.

Photo credit: xiddu.weebly.com

டைட்டானிக் அருகில்

டைட்டானிக் அருகில்

டைட்டானிக் கப்பலை மிக நெருக்கமாக காண்பதற்கு ஏதுவான அரிய புகைப்படம். கப்பல் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் சவுதம்டன் துறைமுகத்தில் நின்றபோது எடுக்கப்பட்ட படம்.

Photo credit: www.therichest.com

டைட்டானிக் கேப்டன்

டைட்டானிக் கேப்டன்

டைட்டானிக் கப்பலின் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித். கப்பல் புறப்படுவதற்கு முன் சந்தோஷத்துடன், பெருமையுடன் போஸ் தரும் எட்வர்டு. கப்பல் விபத்துக்குள்ளானதில் இவர் மீது நேரடியாக குற்றச்சாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo credit: www.boston.com

காவு வாங்கிய பனிப்பாறை

காவு வாங்கிய பனிப்பாறை

கப்பலை காவு வாங்கிய பனிப்பாறை இதுதான். கப்பல் மூழ்கிய பின்னர் எடுக்கப்பட்ட படம்.

Photo credit: www.rarehistoricalphotos.com

உயிர்காக்கும் படகு

உயிர்காக்கும் படகு

டைட்டானிக் கப்பல் கட்டப்பட்ட போது உலகிலேயே அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கப்பலாக தெரிவிக்கப்பட்டாலும், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உயிர் காக்கும் படகுகள் இல்லை. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் படகு ஒன்றின் மூலமாக உயிர்பிழைத்தவர்கள் கரையை நோக்கி செல்லும் காட்சி.

Photo credit: www.thechronicleherald.ca

மீட்புக் கப்பல்

மீட்புக் கப்பல்

டைட்டானிக் கப்பல் விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆர்எம்எஸ் கர்பதியா கப்பலின் உயிர்காக்கும் படகு ஒன்றில் டைட்டானிக் கப்பலில் பயணித்தவர்கள் மீட்கப்பட்டு வரும் காட்சியை காட்டும் அரிய புகைப்படம்.

Photo credit: www.bbc.com

உயிர்பிழைத்தவர்கள்

உயிர்பிழைத்தவர்கள்

டைட்டானிக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் தங்களது அனுபவத்தை பத்திரிக்கையாளர்களிடம் அதிர்ச்சி விலகாமல் விவரிக்கும் காட்சி.

Photo credit: www.dallasnews.com

உறவும், நட்பும்...

உறவும், நட்பும்...

டைட்டானிக் கப்பலில் இருந்தவர்களை மீட்கச் சென்ற ஆர்எம்எஸ் கார்பதியா கப்பலை எதிர்நோக்கி காத்திருக்கும் உறவினர்களும், நண்பர்களும்...!!

Photo credit: www.pinterest.com

நியூயார்க்கில் பதட்டம்

நியூயார்க்கில் பதட்டம்

டைட்டானிக் கப்பல் விபத்து அந்த காலத்தில் மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய சம்பவம். டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து தெரிந்துகொள்வதற்காக நியூயார்க் நகரின் லோயர் பிராட்வே சாலையில் குழுமிய மக்கள்.

Photo credit: alookthrutime.wordpress.com

உடனுக்குடன் தகவல்

உடனுக்குடன் தகவல்

நியூயார்க் நகரிலுள்ள தி சன் பத்திரிக்கை அலுவலக கட்டட சுவரில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில், டைட்டானிக் கப்பல் விபத்து குறித்த தகவல்கள் உடனுக்குடன் தகவல் பலகையில் எழுதப்பட்டது. விபத்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்காக குவிந்திருந்த மக்கள்.

Photo credit: cityroom.blogs.nytimes.com

சிரிப்பதா, அழுவுவதா நிலையில்...

சிரிப்பதா, அழுவுவதா நிலையில்...

டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் ஆர்எம்எஸ் கார்பதியா மீட்புக் கப்பலில் அதிர்ச்சி விலகாமலும், உயிர் பிழைத்த சந்தோஷத்திலும் திரும்பும் காட்சி.

Photo credit: www.indulgy.com

டைட்டானிக் டிக்கெட்

டைட்டானிக் டிக்கெட்

டைட்டானிக் சொகுசு கப்பலில் பயணிப்பதற்காக பெண் ஒருவர் பெயரில் வாங்கப்பட்ட பயணச் சீட்டு இதுதான். ஆனால், அது எமலோகம் செல்வதற்கான பயணச் சீட்டாக அமைந்துவிட்டது துரதிருஷ்டம். ஆம், இந்த பயணச்சீட்டை வாங்கிய பெண்ணின் தந்தை மற்றும் மூன்று சகோதரர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர்.

Photo credit: tumblr.thefjp.org

 மெனு கார்டு

மெனு கார்டு

டைட்டானிக் கப்பலில் மதிய சாப்பாட்டிற்கான உணவு வகைகள் விபரங்கள் அடங்கிய மெனு கார்டு.

Photo credit: mrmhadams.typepad.com

உடைந்த பாகம்

உடைந்த பாகம்

டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி உடைந்த உலோக பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 17 டன் எடையுடைய இந்த உலோக பாகம் சமீபத்தில்தான் புகைப்படம் எடுக்கப்பட்டது.

Photo credit: www.thechronicleherald.ca

தங்க கடிகாரம்

தங்க கடிகாரம்

டைட்டானிக் கப்பலில் பயணித்த கார்ல் ஆஸ்பிலண்ட் என்பவரின் தங்க கடிகாரம். விபத்தில் கார்ல் உயிரிழந்துவிட்டார். அவர் பயன்படுத்திய தங்க கடிகாரம் மட்டுமே எஞ்சியது. இந்த தங்க கடிகாரம் சில ஆண்டுகளுக்கு முன் ஏலம் விடப்பட்டது.

Photo credit: www.youtube.com

 கரன்சி தாள்கள்

கரன்சி தாள்கள்

டைட்டானிக் கப்பலிருந்து கைப்பற்றப்பட்ட வெவ்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள். 2008ம் ஆண்டு அட்லாண்டாவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

Photo credit: www.boston.com

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Rare Pictures Of The Titanic Ship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X