டிசி வடிவமைத்த அட்டகாசமான கஸ்மைஸ் கார்கள்- சிறப்புத் தொகுப்பு

Written By:

இந்தியாவில் ஏராளமான கார் கஸ்டமைஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், அதில் முன்னிலையில் இருப்பது டிசி டிசைன் நிறுவனம்தான். பிரபல கார் வடிவமைப்பு நிறுவனர் திலீப் சாப்ரியாவின் டிசி டிசைன் நிறுவனம் இதுவரை ஏராளமான மாடல்களை கஸ்டமைஸ் செய்து கொடுத்து வருவதோடு, சொந்தமாகவே கார்களையும் தயாரிக்கும் நுட்பங்களை கொண்டு சிறந்து விளங்குகிறது.

இந்த நிலையில், டிசி டிசைன் நிறுவனம் வடிவமைத்த சிறந்த கஸ்டமைஸ் கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நாம் வழக்கமாக பயணித்த கார்களை அந்த நிறுவனம் எந்தளவு சிறப்பாக மாற்றியிருக்கிறது என்பதை இந்த செய்தித்தொகுப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இங்குள்ள பெரும்பாலான கார்களை கட்டணத்துடன் கஸ்டமைஸ் செய்யும் வாய்ப்பினை டிசி வழங்குகிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ மிட்நைட்

ஃபோக்ஸ்வேகன் போலோ மிட்நைட்

சிறப்பான டிசைன் கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் போலோ. இந்த காரை மிட்நைட் என்ற பெயரில் அட்டகாசமாக மாற்றியிருந்தது டிசி. கரு வண்ண மேட் ஃபினிஷ், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகளுக்குள் கம்பீரமான அலாய் வீல்கள் என அசத்தியது.

 பின்புற அழகு

பின்புற அழகு

குறிப்பாக, இந்த போலோ மிட்நைட் எடிசன் காரின் பின்புறம் மிக அட்டகாசமாக இருந்தது. டெயில்லைட்டுகளை இணைக்கும் சிவப்பு வண்ண அலங்காரம், செவ்வக வடிவ புகைப்போக்கிகள் என அசத்தியது. தெருவில் சென்றால் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் பின்னழகுடன் காட்சி தந்தது.

ஆம்பிராய்ட்

ஆம்பிராய்ட்

அடுத்த ஜென்மம் என்று ஒருந்தால், இந்த ஆம்பிராய்ட் கான்செப்ட்டின் அடிப்படையில்தாந் பிறக்க வேண்டும் என்று அம்பாசடர் காரே வேண்டி, விரும்பும் அளவுக்கு சிறப்பான டிசைன் அது.

விற்பனை பிச்சுக்கும்...

விற்பனை பிச்சுக்கும்...

இந்த கான்செப்ட்டை அப்படியே தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தி விற்பனைக்கு விட்டால், நிச்சயம் பணக்காரர்களின் வீட்டு கராஜின் செல்லப்பிள்ளையாக மாறியிருக்கும்.

உட்புறமும்...

உட்புறமும்...

உட்புறமும் எதிர்கால கார்களை போன்ற உணர்வை தரும் சொகுசு வசதிகள் நிரம்பி வழிந்தது. அம்பாசடர் காதலர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட கான்செப்ட் இது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் மீது கைவைப்பது என்பது சவாலானது. அந்த சவாலை நேர்த்தியாக கையாண்டு, மிகச்சிறப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

மேட்ஃபினிஷ், எல்இடி லைட்டுகள், வட்ட வடிவ இரட்டை ஹெட்லைட்டுகள் என மிக அசத்தலாக மாறியிருக்கிறது.இன்டீரியரிலும் மிக கவனமுடன் புதிய வண்ணத்தை கொடுத்திருப்பதோடு, புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை சேர்த்திருக்கிறது டிசி நிறுவனம்.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

வந்த புதிதில் பலரின் கனவு எஸ்யூவி மாடலாக இருந்தது டஸ்ட்டர். இந்த எஸ்யூவியின் கம்பீரத்தை கூட்டும் விதத்தில் எல்இடி லைட்டுகள், வட்ட வடிவ ஹெட்லைட்டுகளை கொடுத்து அசத்தியிருக்கிறது டிசி டிசைன்.

 உட்புறம்

உட்புறம்

மர அலங்கார வேலைப்பாடுகள், சாய்மான இருக்கை, விசேஷ வண்ணம் பயன்படுத்தப்பட்டு ரெனோ டஸ்ட்டரை பிரிமியம் காராக மாறி இருப்பதை காணலாம்.

 டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

பலரின் விருப்ப வாகனமான இன்னோவா காரையும் தனது கைவண்ணத்தில் சொகுசு காராக மாற்றியிருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். வலுவாக காட்டுவதற்கான கூடுதல் பிளாஸ்டிங் கிளாடிங்குகள், பெரிய ஏர்பேட், புதிய அலாய் வீல்கள் என வெளிப்புறம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இன்டீரியரை பொறுத்தவரையில் சாய்மான இருக்கை, தொடு உணர் பொத்தான்கள், திரைகள், அலங்கார வண்ண விளக்குகள் என முற்றிலும் சொகுசு கார்களை விஞ்சி நின்றது. ரூ.7 லட்சம் வரை கட்டணத்தில் இந்த கஸ்டமைஸ் பணிகள் செய்யப்படுகின்றன.

மஹிந்திரா தார்

மஹிந்திரா தார்

ஆஃப்ரோடுகளுக்கு ஏற்ற மஹிந்திரா தார் எஸ்யூவியின் நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக இது தெரிவிக்கப்பட்டது. திறந்த கூரை அமைப்புடன், க்ரோம் அலங்காரம் உள்ளிட்டவற்றுடன் மிக அசத்தலாக டிசைன் செய்யப்பட்டிருந்தது.

அசத்தல்

அசத்தல்

முன்புறத்திற்கு இணையாக பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இது மஹிந்திரா தார் எஸ்யூவி என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இளைஞர்களை வெகுவாக கவர்ந்த கான்செப்ட் மாடல் இது.

 அம்பாசடர்

அம்பாசடர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகளின் ஆஸ்தான கார் மாடலாக அம்பாசடர்தான் விளங்கியது. அதற்காக, அரசுத்துறை விஐபி.,கள் பயணிப்பதற்காக உருவாக்ப்பட்ட கான்செப்ட்.

உட்புறத்தில்...

உட்புறத்தில்...

உட்புறத்தில் மிக சிறப்பான வசதிகள், இருக்கை அமைப்பு, பொழுதுபோக்கு வசதிகளுடன் இந்த அம்பாசடர் கார் மாற்றப்பட்டிருக்கிறது.

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 10 டீசல் கார்கள்!

அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 10 டீசல் கார்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Of These DC Modified Cars Will Take Your Breath Away.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark