தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் உலகின் சிக்கலான சாலை சந்திப்புகள்!
சாலை சந்திப்புகளை எளிதாக கடக்கும் விதத்தில், இப்போது மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இங்கே பார்க்க போகும் சாலை சந்திப்புகள் ஓட்டுனர்களுக்கு தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் விதத்தில் இருக்கின்றன.
கத்திப்பாரா மேம்பாலத்தை பார்த்தே குழம்பும் பலருக்கு, இந்த சாலை சந்திப்புகளை பார்த்தால் நிச்சயம் தலை சுற்றும். அதுபோன்று, உலகின் மிகவும் சிக்கலான அமைப்புடைய சாலை சந்திப்புகளை இங்கே பார்க்கலாம்.

01. மேஜிக் ரவுண்ட்அபவுட், இங்கிலாந்து
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருக்கும் ஐ-710 மற்றும் ஐ-105 என்ற சாலை சந்திப்பு மேம்பாலங்கள் உலகிலேயே அதிக சிக்கல் வாய்ந்த சந்திப்புகளில் ஒன்று. எப்போதுமே வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும் இந்த சாலை சந்திப்பில், கவனக்குறைவாக ஓட்டுனர் வழி தவறினால், மீண்டும் குறிப்பிட்ட வழியை பிடிப்பது மேலும் சிக்கலாகிப் போகும் அளவுக்கு குழப்பத்தை தரும்.

02. லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருக்கும் ஐ-710 மற்றும் ஐ-105 என்ற சாலை சந்திப்பு மேம்பாலங்கள் உலகிலேயே அதிக சிக்கல் வாய்ந்த சந்திப்புகளில் ஒன்று. எப்போதுமே வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும் இந்த சாலை சந்திப்பில், கவனக்குறைவாக ஓட்டுனர் வழி தவறினால், மீண்டும் குறிப்பிட்ட வழியை பிடிப்பது மேலும் சிக்கலாகிப் போகும் அளவுக்கு குழப்பத்தை தரும்.

03. டாம் மோர்லேண்ட், அமெரிக்கா
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவின் வடகிழக்கு பகுதியில் இந்த டாம் மோர்லேண்ட் இன்டர்சேஞ்ச் எனப்படும் வட்டச் சாலை அமைந்துள்ளது. தினசரி, இந்த சந்திப்பு வழியாக 2.80 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. 1986ல் 86 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அமைக்கப்பட்டது.

04. புக்ஸி வியாடக்ட், ஷாங்காய்
சீனாவிலுள்ள, ஷாங்காய் நகரின் மிகவும் பரபரப்பான வட்டச் சாலை சந்திப்புதான் புக்ஸி வியாடக்ட். அந்நாட்டின் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கும் இந்த சாலை சந்திப்பு, ஷாங்காய் நகரின் போக்குவரத்தை எளிதாக கையாள உதவி வருகிறது. எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும், சிறிது கவனம் தவறினாலும், வழி தவறு நிச்சயமாக கூறப்படுகிறது.

05. ஜட்ஜ் ஹாரி பிரிகெர்சன் இன்டர்சேஞ்ச், கலிஃபோர்னியா
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் மற்றொரு முக்கிய சாலை சந்திப்பு. இதுவும் மிக மிக சிக்கலான அமைப்புடையது. 1993ம் ஆண்டு பொது பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. ஐ- 105 நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக, நடந்த வழக்குக்கு தலைமை நீதிபதியாக செயல்பட்ட ஹாரி பிரிகெர்சன் பெயரில்தான் இந்த மேம்பாலம் அழைக்கப்படுகிறது.

06. புத்ரஜெயா, மலேசியா
உலகின் மிக நீளமான தடங்களை கொண்ட சாலை சந்திப்பு அமைப்பாக கருதப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் அலுவலகம், பிரபல புத்ரஜெயா ஷாங்கிரி லா ஓட்டல் ஆகியவற்றை ஒட்டி இந்த வட்டச் சாலை சந்திப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

07. தகன்ஸ்கயா ஸ்கொயர், மாஸ்கோ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின், தென்கிழக்கு பகுதியிலுள்ள தகன்ஸ்கயா சதுக்கம் பகுதியில் இருக்கும் சாலை சந்திப்பு உலகிலேயே மிகவும் குழப்பமான சாலை சந்திப்புகளில் ஒன்று. அங்கு அமைந்திருக்கும் மார்க்கெட் பகுதியின் சாலைகளை இணைக்கும் இந்த சந்திப்பு ஓட்டுனர்களுக்கு தலைவலியை கொண்டு வரும் என்பது உறுதி என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தவர்கள்.

08. டி ஜூலியோ அவெனிடா, பியூனோஸ் ஏர்ஸ், அர்ஜென்டினா
உலகின் மிக அகலமான சாலை சந்திப்பாக இது கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமும், 140 மீட்டர் அகலமும் கொண்டதாக நீள்கிறது. இப்போது, சாலையில் ரேஸ் விடுபவர்களின் பந்தயம் களம் போல மாறிவிட்டது. ஒரு பக்கத்திற்கு 7 தடங்களும், அதனிலிருந்து பிரியும், சேரும் சிறு சிறு வீதிகளுமாய் மிகவும் சிக்கலமான சாலை அமைப்புடையது.

09. கிராவெலி ஹில் இன்டர்சேஞ்ச், இங்கிலாந்து
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியிலுல்ள ஜக்ஷன் 6 என்று அழைக்கப்படும் கிராவெலி ஹில் இன்டர்சேஞ்ச் சாலை சந்திப்பும் உலகின் மிகவும் சிக்கலான சாலை சந்திப்புகளில் ஒன்று. இந்த சந்திப்பு 30 ஏக்கர் பரப்பளவிலும், 18 வழித்தடங்களையும் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications