பெற்றால் இப்படியொரு பிள்ளையை பெறணும்! லோயர் மிடில்-கிளாஸ் குடும்பத்தின் முதல் கார்!

குடும்பத்தில் முதல் கார் வாங்குவது எப்போதுமே ஸ்பெஷலான ஒன்றாகும். இன்றைய கால உலகில் கார்கள் மிகவும் அத்தியாவசியமானதாக மாறி உள்ளதால், வீட்டிற்கு ஒரு கார் தேவை என்பது கட்டாயமாகி வருகிறது. அதுவும், குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசு குடும்பத்தின் முதல் காரை வாங்குகிறார் என்றால் அது உணர்ச்சி மிகுந்த விஷயமாகும்.

தனது மகன் அல்லது மகள் முதல் காரை வாங்குகிறார் எனும்போது எந்தவொரு பெற்றோருக்கும் அது பெருமைக்குரியதே ஆகும். அந்த வகையில் இங்கு ஒரு இளைஞர் குடும்பத்தின் முதல் காராக ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) காரை வாங்கி தனது பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

skoda kylaq as family s first car

அதுவும் குறிப்பாக, பிறந்த நாள் காணும் தனது தந்தைக்கு சர்பிரைஸ் (Surprise) அளிக்கும் விதமாக இந்த இளைஞர் ஸ்கோடா கைலாக் காரை வாங்கி இருப்பது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை அவர் தனது 'தே_கால்_மீ_எச்வி' (_they_call_me_hv_) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிடில்-கிளாஸ் (Middle-Class)-க்கும் கீழான குடும்பத்தில் இருந்து வந்து கனவை நிஜமாக்கி உள்ளதாகவும், இதற்கு எந்த அளவிற்கு கடினமாக உழைத்துள்ளேன் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றும் பிராண்ட்-நியூ ஸ்கோடா கைலாக் காரை வாங்கியுள்ள இந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதனை குறுகிய நேரத்தில் நிஜமாக்கி கொடுத்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்து இருப்பதையும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் காண முடிகிறது.

skoda kylaq as family s first car

முக்கியமாக இந்த பதிவில், தனது அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள இந்த நபர், இந்த அற்புதமான தருணங்களை பல வருடங்களுக்கு நினைவில் வைத்திருப்பேன் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். புத்தம் புதிய கைலாக் காரை டெலிவிரி (Delivery) பெற்று வீட்டிற்கு கொண்டுவரும் வரையில் இந்த இளைஞர் புதியதாக கார் வாங்கியதை தனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை.

மாறாக, பிறந்த நாளுக்கு பரிசாக ஷூ (Shoe) அடங்கிய பெட்டியை தந்தையிடம் இந்த இளைஞர் கொடுத்துள்ளார். அதை பிரித்து பார்த்த அவரது தந்தை ஷூ ஒன்றினுள் சாவி ஒன்று இருப்பதை குழப்பத்துடன் பார்க்க, இது நாம் வாங்கியுள்ள குடும்பத்தின் முதல் காரின் சாவி என இளைஞர் கூற, தந்தைக்கு ஆனந்தம் தாங்கவில்லை; உடனே மகனை கட்டிப்பிடித்து பாச மழையை பொழிந்துள்ளார்.

பின்னர், இருவரும் பிராண்ட்-நியூ காருடன் குடும்பத்தின் மற்றவர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தங்களது காரை பார்வையிட்டனர். கைலாக் ஆனது ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தின் லேட்டஸ்ட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) கார் ஆகும். ரூ.8.25 லட்சத்தில் இருந்து துவங்கும் கைலாக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.13.99 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிடில்-கிளாஸ் குடும்பத்திற்கு ஏற்ற காராக பலரால் ஸ்கோடா கைலாக் கார்கள் வாங்கப்பட்டு வருகின்றன. அந்த அளவிற்கு தரமான மற்றும் அதிநவீன அம்சங்கள் அடங்கிய ஸ்கோடா காரை தான் இந்த இளைஞர் தனது குடும்பத்திற்காக வாங்கி உள்ளார். இதனை அவர் தனது தந்தையிடம் சர்பிரைஸாக தெரிவித்த விதம் பார்க்க மிகவும் அழகாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 3, 2025, 21:45 [IST]
English summary
Son bought skoda kylaq as the familys first car to surprise dad check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+