10 லட்ச ரூபாய் பைக் எல்லாம் சாதாரணம் ஆகிடுச்சு! லைசன்ஸ் பெறும் வயது கூட எட்டாத மகனுக்கு சர்பிரைஸ் கிஃப்ட்!!

கவாஸாகி (Kawasaki) பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவு ஆகும். அதுவும் சிறு வயதில் விளம்பரங்களை எல்லாம் பார்த்து கவாஸாகி, டிரையம்ப் (Triumph) போன்ற விலையுயர்ந்த பைக்குகள் மீதுதான் அதிகமாக ஆசை ஏற்படும். ஆனால், இன்றைய கால சிறுவர்கள் இளைஞர்களான பின் அந்த ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விடுகின்றனர். ஆனால், இங்கு ஒரு சிறுவன் சிறு வயதிலேயே கவாஸாகி இசட்900 (Z900) பைக் ஒன்றிற்கு ஓனராகி உள்ளான். தற்போதைக்கு இந்த கவாஸாகி பைக்கை அவனது தந்தை தான் பயன்படுத்த போகிறார் என்றாலும், சிறுவன் இளைஞன் ஆன பின் அவன்தான் அதிகமாக இந்த பைக்கை ஓட்ட போகிறான் என்பது உறுதி.

பெங்களூருவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் 13 வயதான மகனுக்கு அவனது தந்தை சர்பிரைஸ் (Surprise) பரிசாக இந்த கவாஸாகி பைக்கை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஒருவர் விலையுயர்ந்த கவாஸாகி இசட்900 பைக் உடன் நிற்கிறார்; அவரை பார்த்து சிறுவன் ஒருவன் அழுதப்படி ஓடிவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Dad Bought Kawasaki Z900 Bike

வீடியோவில் காட்சித்தரும் அந்த நபர் தான் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டவர் என்பது அவரது பதிவின் மூலம் தெரிய வருகிறது. வீட்டிற்கு வெளியே புதிய பைக் உடன் வெளியே விளையாட சென்ற மகனுக்காக காத்திருக்கிறார். இதனை கண்டதும் தொலைவில் இருந்து ஓடிவரும் அவரது மகன் பிராண்ட்-நியூ கவாஸாகி பைக்கின் மீது அப்பாவை கண்டதும் இன்னும் வேகமாக ஆனந்தத்தில் அழுதப்படி ஓடிவருவதை வீடியோவில் காணலாம்.

பைக்கை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்றதும் நேராக அதனை மகனிடம் சர்பிரைஸாக காண்பிக்க இந்த நபர் கொண்டு வந்துள்ளார். அருகே வந்ததும் ஆனந்தத்தில் அப்பாவை கண்டி அணைந்த கொண்ட மகன், பைக்கை இன்னும் நெருக்கமாக ஆச்சிரியத்துடன் பார்த்தான். அதன்பின், தந்தை சொன்னப்படி சாவியை திருகி பைக்கை ஸ்டார்ட் செய்து பார்த்துள்ளான்.

Dad Bought Kawasaki Z900 Bike

இன்றைய கால மாடர்ன் பைக்குகள் அனைத்தையும் எளிமையாக பொத்தான் மூலம் ஸ்டார்ட் செய்ய முடிகிறது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான கவாஸாகி இசட்900 பைக்கில் மட்டும் இந்த வசதி இல்லாமலா இருக்க போகிறது. இப்படிப்பட்ட பைக்கை கண்டதும் ஆனந்தத்தில் அந்த சிறுவன் சில நிமிடங்களுக்கு அழுகையை நிறுத்தவே இல்லை.

இன்னும் 4-5 வருடங்களில் 18 வயது ஆன பின் ஓட்டுனர் உரிமம் பெறும் வயது வந்துவிடும் என்பதால், அதன்பின் இந்த கவாஸாகி பைக் முழுவதும் இந்த சிறுவனின் கைக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. சுமார் ரூ.9.52 லட்சமாக எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டதாக இருப்பினும், பெங்களூரு சாலைகளில் அடிக்கடி தென்படக்கூடிய சூப்பர் பைக்குகளுள் ஒன்று கவாஸாகி இசட்900 ஆகும்.

Dad Bought Kawasaki Z900 Bike

ரூ.9.52 லட்சம் என்பது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இசட்900 பைக்கில் 948சிசி, லிக்யுடு-கூல்டு, இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. சுமார் 125 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மகனிடம் பைக்கை சர்பிரைஸ் ஆக காண்பிப்பது எல்லாம் சரி தான், ஆனால் அதற்காக அவனை பாவம் இவ்வளவு தொலைவா ஓடிவர விடுவது. வேகமாக ஓடிவருவதால் இடையில் தவறி விழுந்து ஏதேனும் நடந்தால் என்ன ஆகுவது என்பதை கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெற என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டியதாக உள்ளது. ஆனால், இந்த நபர் வாங்கியுள்ள கவாஸாகி இசட்900 ஆனது சூப்பரான பைக் ஆகும்.

Source: Cartog (https://www.cartoq.com/)

More from DriveSpark

Article Published On: Monday, July 7, 2025, 19:14 [IST]
English summary
Son cried happy tears after dad bought kawasaki z900 bike check all details here
மேலும்... #super bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X