கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

இங்கிலாந்தில் இருந்து கொண்டு மகன் செய்த காரியத்தால், பஞ்சாப்பில் வசிக்கும் பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

நமக்கு பிடித்தவர்களுக்கு புதிய காரை பரிசளிப்பது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். குறிப்பாக மகனோ அல்லது மகளோ தங்கள் பெற்றோர்களுக்கு காரை பரிசளிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்க கூடிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த காலங்களில் கார் அல்லது மோட்டார்சைக்கிளை பெற்றோர்களுக்கு பரிசளித்த பிள்ளைகள் பலரை நாம் பார்த்துள்ளோம்.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

இந்த வரிசையில் தற்போதும் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் மகன் டாடா ஹாரியர் (Tata Harrier) காரை, இந்தியாவில் வசிக்கும் தனது பெற்றோர்களுக்கு பரிசளித்துள்ளார். Car Quest என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தோன்றும் வினய் என்னும் நபர், சர்ப்பரைஸாக சென்று, சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு காரை பரிசளித்துள்ளார்.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

இந்த காணொளியில் புது டாடா ஹாரியர் பிளாக் எடிசன் (Tata Harrier Black Edition) கார் தற்காலிக பதிவு எண்ணுடன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் எப்படி சர்ப்ரைஸாக சென்று காரை பரிசாக வழங்கினார்? என்பதையும் காணொளியில் காண முடிகிறது. இது டாடா ஹாரியர் காரின் எக்ஸ்இஸட்ஏ (XZA) வேரியண்ட் ஆகும்.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

இந்த வேரியண்ட் பல்வேறு அட்டகாசமான வசதிகளுடன் வருகிறது. அத்துடன் இது டாடா ஹாரியர் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வயதானவர்கள் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். காரை பெறும்போது அந்த பெற்றோர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தனர்? என்பதையும் காணொளியில் பார்க்க முடிகிறது.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

மேலும் காரை வாங்கி கொண்ட பிறகு, இங்கிலாந்தில் உள்ள மகனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் பேசியுள்ளனர். அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் சார்பாக வேறு ஒருவர் வீட்டிற்கு சென்று காரை ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்த கூடிய நிகழ்வுதான் என்பதில் சந்தேகமில்லை.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

டாடா ஹாரியர் கார் நடப்பாண்டில் மேம்படுத்தப்பட்டது. அப்போது கூடுதலாக பல்வேறு புதிய வசதிகளை அந்த கார்பெற்றது. டாடா ஹாரியர் கார் தற்போது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுடன் வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. அத்துடன் புத்தம் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனையும் டாடா சேர்த்துள்ளது.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

இது மென்மையாக இருப்பதுடன், சக்தியை நன்றாக பயன்படுத்துகிறது. அதே சமயம் டாடா ஹாரியர் காரின் பிளாக் எடிசன், அட்லஸ் பிளாக் நிறத்தில் விற்பனைக்கு வருகிறது. இது காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. டாடா ஹாரியர் பிளாக் எடிசன் காரில், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அலாய் கூட கருப்பு நிறத்தில்தான் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

கதவை தட்டிய அடையாளம் தெரியாத நபர்... வெளியே வந்த முதியவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... சந்தோஷம் தாங்கல

இந்த காரில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை. ஜேபிஎல்-லின் 7 ஸ்பீக்கர் அமைப்புடன் டாடா ஹாரியர் பிளாக் எடிசன் வருகிறது. பிரீமியம் உணர்வை தரும் இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றையும் ஹாரியர் பிளாக் எடிசன் பெற்றுள்ளது.

ஆறு ஏர்பேக்குகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் டாடா ஹாரியர் பிளாக் எடிசன் கார் பெற்றுள்ளது. இது மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son Gifts Dad A Brand-New Tata Harrier Black Edition. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X