பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

மகன் ஒருவர் தனது தந்தைக்கு சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

ஒருவரிடம் வாகனங்களை பரிசாக பெறுவது என்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். குறிப்பாக தங்களது பிள்ளைகள் தங்களுக்கு பிடித்தமான வாகனத்தை பரிசாக வழங்கும்போது பெற்றோர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்த வகையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை மகன் ஒருவர் தனது தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

அந்த வீடியோ Sumit Cool Vlogs என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தம் புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்குவது முதல், அதை பரிசாக வழங்குவது வரை முழுமையான பயணத்தையும் இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. தனது தந்தைக்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை பரிசளிப்பது குறித்த தனது திட்டத்தை மகன், இந்த வீடியோவின் தொடக்கத்தில் கூறுகிறார்.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

ஆனால் அந்த பைக்கிற்கு 2 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாகவும், எனினும் விரைவாக பைக்கை பெறுவதற்கு முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதன்பின் ஷோரூமில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனால் காத்திருப்பு காலம் எப்படி குறைக்கப்பட்டது? என்பதற்கான பதில் வீடியோவில் இல்லை.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

இதன்பின் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் டெலிவரி பெறப்படுகிறது. இறுதியாக அவரது தந்தையிடம் அந்த மோட்டார்சைக்கிளின் சாவி ஒப்படைக்கப்படுகிறது. அப்போது அந்த தந்தை மகிழ்ச்சியில் தனது மகனை கட்டி தழுவி கொள்கிறார். பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாகும். 350 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் முதன்மையானதாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 திகழ்ந்து கொண்டுள்ளது. இந்த பைக்கின் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

அத்துடன் அந்த புதிய மாடலை இந்திய சாலைகளில் சோதனையும் செய்து வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது கேமராவின் கண்களில் பல முறை இந்த புதிய மாடல் சிக்கியுள்ளது. புதிய தலைமுறை மாடல் என்பதால், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் பல்வேறு புதிய வசதிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா உள்ளிட்ட பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போட்டியிட்டு வருகிறது. ஜாவா கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெலிவரியில் ஏற்பட்ட காலதாமதத்தால், ஜாவா மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்திதான் ஏற்பட்டுள்ளது.

பசங்கனா இப்படி இருக்கணும்... தந்தைக்கு சர்ப்ரைஸாக மகன் கொடுத்த பரிசு... என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் மற்றொரு முக்கியமான போட்டியாளரான ஹோண்டா ஹைனெஸ் சிபி350 இந்திய சந்தைக்கு புதிதாக வந்துள்ள மாடல் ஆகும். ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டும் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹைனெஸ் சிபி350 கவனம் ஈர்த்துள்ளது. ஆனால் விற்பனை எண்ணிக்கையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகப்பெரிய முன்னிலையில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son Gifts Dad A Royal Enfield Classic 350 Motorcycle, Watch Viral Video. Read in Tamil
Story first published: Thursday, June 3, 2021, 20:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X