விலை உயர்ந்த பைக் பரிசு! ஷோரூமுக்கு வந்த இவர் உண்மையில் யார்னு தெரியுமா? விஷயம் தெரிஞ்சதும் மிரண்டு போன மக்கள்
இளம் வயதினர் மட்டுமே பைக்கில் தொலை தூர பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்ற பொதுவான சிந்தனை நம் அனைவரின் மனதிலும் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் தொலை தூர பைக் பயணங்களை மேற்கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல. இதற்கு ரவி ஒரு உதாரணம்.
64 வயதாகும் இவர் சமீபத்தில் தனது 2 பேரன்களுடன் வந்து, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக்கை டெலிவரி எடுத்துள்ளார். ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகன் இந்த பரிசை வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மகன் பரிசாக வழங்கிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கை, ரவி டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூ-டியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ரவி தனது 2 பேரன்களுடன், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கை டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 2.85 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இது இந்திய சந்தைக்கு புதுவரவாகும். ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில்தான் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 452 சிசி லிக்யூட் கூல்டு டிஓஹெச்சி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 39.5 ஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கேடிஎம் 390 அட்வென்ஜர் எக்ஸ் (KTM 390 Adventure X), யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure), பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS), ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Triumph Scrambler 400 X) போன்ற பைக்குகளுடன், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 போட்டியிடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பைக்குகளில் சாகச பயணங்களை மேற்கொள்வதற்கு வயது ஒரு தடையே அல்ல என்பதை ரவி நிரூபித்துள்ளார். இதற்கு தேவை மன உறுதி மட்டுமே. இந்த வகையில் ரவி பாக்கியசாலிதான். கூடிய விரைவில் அவர் தனது புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் சாகச பயணம் மேற்கொள்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கை பரிசாக பெற்றுள்ள ரவியை வீடியோவில் பார்த்த பலரும், இவருக்கு 64 வயதாகி விட்டது என்பதை நம்பவே இல்லை. ஆனால் உண்மை தெரிந்ததும் அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








