ஸ்கூட்டரை வித்து அம்மாவின் உயிரை காப்பாற்றிய தந்தை! வளந்து பெரியவன் ஆனதும் சபதத்தை நிறைவேற்றிய மகன்!

யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தோன்றும் நபர், தனது தந்தைக்கு, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பைக்கை அவர் ஏன் தனது தந்தைக்கு பரிசாக வழங்கினார்? என்பதை அவர் வீடியோவில் பேசியுள்ளார். அவர் ஹிந்தியில் பேசியுள்ளதை சுருக்கமாக தமிழில் மொழி பெயர்த்து, இந்த செய்தியில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்த வீடியோவில் தோன்றும் நபர் சிறு வயதில் இருந்தபோது, அவர்களது குடும்பத்தில் ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.

ஆனால் இந்த நபரின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அந்த ஸ்கூட்டரை அவரது தந்தை விற்பனை செய்து விட்டார். அதன் மூலம் கிடைத்த பணத்தில், அவரது அம்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது தந்தை வேலை உள்ளிட்ட இடங்களுக்கு எல்லாம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது.

Son Gifts Dad A Royal Enfield Super Meteor 650

சில சமயங்களில் அவர் சைக்கிளில் செல்வாராம். இதன் காரணமாக அவரது தந்தைக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கவில்லை. இது இந்த வீடியோவில் தோன்றும் நபருக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே கொஞ்சம் வளர்ந்த பிறகு, தனது தந்தைக்கு அருமையான ஒரு பைக்கை பரிசளிக்க வேண்டும் என அவர் சபதம் எடுத்தார்.

இதற்கிடையே காலங்கள் உருண்டோடிய நிலையில், அவரது தந்தைக்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கை வாங்க வேண்டும் என்ற ஆசை இருப்பது, அவருக்கு தெரிய வந்தது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.93 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Royal Enfield Super Meteor 650

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 2.30 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. எனவே இதை விட விலை உயர்ந்த ஒரு ராயல் என்பீல்டு பைக்கை தனது தந்தைக்கு பரிசாக வழங்க வேண்டும் என அவர் முடிவு செய்தார். இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை அவர் பரிசளித்துள்ளார்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் ஆரம்ப விலையே 3.64 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 3.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை விட விலை உயர்ந்தது என்பதால், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை அவர் தனது தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நபர் தனது தந்தைக்கு ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை பரிசாக வழங்கிய காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவின் மூலமாக நமக்கு தெரிய வந்துள்ள உண்மை கதை நெகிழ்ச்சிகரமானதாக இருப்பதால், இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அம்மாவின் சிகிச்சைக்காக ஸ்கூட்டரை விற்பனை செய்த தந்தைக்கு ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை பரிசாக வழங்கிய காரணத்திற்காக சமூக வலை தளங்களில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650, ஒரு டூரிங் மோட்டார்சைக்கிள் ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த பைக், தொலை தூர பயணங்களின்போது, உங்களுக்கு சௌகரியமான அனுபவத்தை வழங்கும். இதன் காரணமாக விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, இந்த பைக் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில், 648 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) பைக்குகளிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2025, 12:30 [IST]
English summary
Son gifts dad a royal enfield super meteor 650 viral video emotional reason
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+