தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன் செய்த காரியம்! மனுஷன் எல்லாரையும் கண் கலங்க வெச்சுட்டாரு!
இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று செவர்லே டவேரா (Chevrolet Tavera). ஆனால் கடந்த பல வருடங்களுக்கு முன்பே செவர்லே நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறி விட்டதால், தற்போது டவேரா கார்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.
ஆனால் செவர்லே டவேரா நம்பகத்தன்மை வாய்ந்த கார். இது நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடியது. எனவே பழைய செவர்லே டவேரா கார்கள் இன்னமும் இந்திய சாலைகளில் ஓடி கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில், செவர்லே டவேரா காரின் உரிமையாளர் ஒருவர், தற்போது அதனை ரீ-ஸ்டோர் செய்துள்ளார்.

ரீ-ஸ்டோர் என்பது ஒரு பொருளை அதன் பழைய நிலைக்கு கொண்டு வருவதை குறிக்கிறது. இதன்படி இந்த செவர்லே டவேரா காரின் உரிமையாளர், அதனை புதிது போல மாற்றி அசத்தியுள்ளார். ஆனால் பொழுதுபோக்கிற்காக அவர் இதனை செய்யவில்லை. இதற்கு பின்னால் எமோஷனல் காரணம் ஒன்று இருக்கிறது.
ஆட்டோ ரவுண்டர்ஸ் என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. ஆட்டோ ரவுண்டர்ஸ் என்பது, கார் மாடிஃபிகேஷன் உள்ளிட்ட பணிகளை செய்து வரும் ஒரு பிரபலமான நிறுவனம் ஆகும். அவர்கள்தான் வாடிக்கையாளர் ஒருவரின் செவர்லே டவேரா காரை புதிது போல் மாற்றியுள்ளனர்.
புனேவில் உள்ள தங்களது ஒர்க் ஷாப்பிற்கு ரீ-ஸ்டோர் பணிகளுக்காக செவர்லே டவேரா வந்தது என ஆட்டோ ரவுண்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுவதுடன், இந்த வீடியோ தொடங்குகிறது. இந்த செவர்லே டவேரா காரை ரீ-ஸ்டோர் செய்வது கடினமான வேலை என்றாலும் கூட, இதற்கு பின்னால் இருந்த சென்டிமெண்ட் காரணமாக ஒப்பு கொண்டதாக அவர் கூறுவதையும் வீடியோவில் காண முடிகிறது.
இந்த ரீ-ஸ்டோர் பணிகளின் ஒரு பகுதியாக சேதம் அடைந்த பல்வேறு பாகங்களை ஆட்டோ ரவுண்டர்ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இதை எல்லாம் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. அத்துடன் பெயிண்ட் வேலைகளை செய்வதையும் நாம் வீடியோவில் காணலாம். பொதுவாக அதிக நாட்கள் ஆகும் என்பதால், ஆட்டோ ரவுண்டர்ஸ் நிறுவனம் செவர்லே டவேரா போன்ற பழைய வாகனங்களுக்கு வேலை செய்வதை ஒப்பு கொள்ள மாட்டார்களாம்.
அதாவது ஒரு செவர்லே டவேரா காருக்கு வேலை செய்யும் நேரத்தில், 3 கார்களுக்கு அவர்களால் வேலை செய்ய முடியுமாம். எனவே செவர்லே டவேரா போன்ற கார்களை ஒப்பு கொண்டால், தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியது வரும். இந்த தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க முடியாது என்பதால்தான், அவர்கள் பழைய வாகனங்களுக்கு வேலை செய்ய ஒப்பு கொள்வதில்லையாம்.
இருப்பினும் மீண்டும் புதியது போல் மாற்ற வேண்டும் என்ற தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக ரீ-ஸ்டோர் செய்ய வேண்டும் என இந்த செவர்லே டவேரா காரின் உரிமையாளர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே ஆட்டோ ரவுண்டர்ஸ் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. அத்துடன் வேலையையும் அவர்கள் சிறப்பாக முடித்து கொடுத்துள்ளனர்.
தற்போது இந்த செவர்லே டவேரா கார் புத்தம் புதியது போல் காட்சியளிக்கிறது. இந்த வீடியோவின் இறுதியில் செவர்லே டவேரா காரின் உரிமையாளர் நெகிழ்ச்சி அடைவதை நம்மால் காண முடிகிறது. அவர் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயத்தில், அவரது தந்தையால் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கார் மீண்டும் புதியதை போல் மாற்றப்பட்டுள்ளதால், குழந்தையை போல் உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையிலேயே இது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம்தான். கார்களை வெறும் வாகனமாக மட்டுமல்லாது, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் கருத கூடிய நிறைய பேர் இங்கு இருக்கின்றனர். இந்த செவர்லே டவேரா காரின் உரிமையாளர், அதை தங்கள் குடும்ப உறுப்பினர் போல் கருதியதால்தான், ரீ-ஸ்டோர் செய்துள்ளார். தனது தந்தையின் அன்புக்குரிய செவர்லே டவேராவை அவர் மீட்டெடுத்துள்ளார், மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் என்றும் கூட சொல்லலாம்.
இதேபோல் சமீபத்தில் ஒரு குடும்பம் தங்களது முதல் காரை தெரியாமல் விற்பனை செய்து விட்டு, அதை மீண்டும் வாங்குவதற்காக பல வருடங்கள் போராடியுள்ளனர். இறுதியாக அந்த கார் எங்கே உள்ளது? என்பதை கண்டறிந்து, ஒரு வழியாக அதை வாங்கி மீண்டும் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த செய்தியையும் நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருக்கலாம். அதே போன்ற நெகிழ்ச்சியை இந்த செய்தியும் நமக்கு ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications