இந்த மாதிரி பசங்கலாம் கூட இருக்காங்களா! ஒட்டுமொத்த குடும்பத்தையே சந்தோஷத்துல திக்கு முக்காட வெச்சுட்டாரு!
பரிசு என்பது நம் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தரக்கூடியது. பொதுவாக பெற்றோர்கள்தான், தங்கள் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தற்போது காலம் மாறி கொண்டே வருகிறது. குழந்தைகளும், தங்கள் பெற்றோர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக தங்கள் பெற்றோர் ஆசைப்படும் வாகனங்களை, குழந்தைகள் சர்ப்ரைஸாக பரிசளிப்பது தற்போது ஒரு 'டிரெண்ட்' ஆகவே மாறியுள்ளது. கடந்த காலங்களில் குழந்தைகள், தங்கள் பெற்றோர்களுக்கு கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை பரிசளித்தது தொடர்பான பல்வேறு வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம்.
இந்த வரிசையில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மகன் ஒருவர் தன் தந்தைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காரை பரிசாக வழங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

தன் தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு, மகன் இந்த காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரையும் அவர் மஹிந்திரா ஷோரூமிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கேக் வெட்டி, பூஜைகளை நடத்தி, அந்த குடும்பம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை டெலிவரி எடுத்துள்ளது.
இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் mStallion டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டர்போசார்ஜ்டு டீசல் ஆகியவை ஆகும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், அதிநவீன வசதிகளையும் (Features) மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் பெற்றுள்ளது.
இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எலெக்ட்ரின் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை எல்லாம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், பாதுகாப்பு (Safety) வசதிகளுக்கும் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். 6 ஏர்பேக்குகள், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 13.85 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.54 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) போன்ற கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா ஸ்கார்பியோ என் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. ஆன்-ரோடு பயணங்களுடன், ஆஃப்-ரோடு பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்பவர்கள், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








