14 வருஷத்துக்கு முன் சொன்னதை இன்னுமா மறக்கல? பைக் ஷோரூமுக்கு அழைத்து சென்று இப்படி பண்ணுவாருனு எதிர்பார்க்கல!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக உள்ளது. அந்த அளவிற்கு, மற்ற பைக்குகளுக்கு இல்லாத அளவு ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நம் இந்திய மக்கள் தனி கவனத்தை வழங்குகின்றனர். மற்ற நிறுவனங்களின் பைக்குகளை குறிப்பிட்ட வயதினர் வாங்குகின்றனர் என தனித்தனியாக வகைப்படுத்த முடியும். ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை இளம் வயதினரில் இருந்து முதியவர்கள் வரையில் ஆர்வமாக வாங்குகின்றனர்.

அந்த வகையில், இங்கு ஒரு இளைஞர் தனக்காக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வாங்குவதுபோல் குடும்பத்தை ஷோரூமுக்கு அழைத்து சென்று, தனது தந்தைக்கு சர்பிரைஸாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 (Bullet 350) பைக்கை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார். ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் நடந்த இந்த உணர்ச்சி பொங்கும் நிகழ்வை சம்பந்தப்பட்ட இளைஞர் வீடியோவாக காட்சிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

son surprise father by gifting royal bullet 350 bike

இந்த இளைஞரது பெயர் அஷ்வின் ஆகும். மகனிடம் இருந்து பரிசாக புல்லட் 350 பைக்கை பெற்றுள்ள இந்த தந்தைக்கு புல்லட் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது பல வருடங்களாக ஆசையாக இருந்துள்ளது. இதனை தன்னிடமே 14 வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை தனது தந்தை கூறியதாக அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இத்தனை வருடங்களில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் ஒன்றை வாங்குவதற்கு அவருக்கு நிறைய முறை வாய்ப்பு கிடைத்த போதிலும், குடும்பத்தை நினைத்து அவர் அதனை செய்யவில்லை. ஆதலால், தற்போது நான் அவருக்கு புல்லட் பைக்கை பரிசாக வழங்கி உள்ளேன் என அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

son surprise father by gifting royal bullet 350 bike

இதுதொடர்பாக அஷ்வின் பதிவிட்டுள்ள வீடியோவில், ஷோரூம் அதிகாரிகளிடம் இருந்து பிராண்ட்-நியூ புல்லட் 350 பைக்கிற்கான சாவியை பெற்ற அஷ்வின் அதனை நேராக அவரது தந்தையிடம் கொடுக்க சென்றுள்ளார். ஆனால், அவரது தந்தையோ இது உனக்கான பைக் என சாவியை வாங்க மறுத்துவிட்டார். இருப்பினும், அஷ்வின் விடாமல் பைக்கின் சாவியை தந்தையை கொடுக்கவே, இது உனது சகோதரருக்காக வாங்கியுள்ளாயா? என அவரது தந்தை கேட்டார்.

இல்லை... உங்களுக்காக தான் வாங்கினேன் என அஷ்வின் கூறவே, உடனே மகனை கட்டிப்பிடித்து தந்தை ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இது ஷோரூமில் இருந்த அஷ்வினின் தாய் உள்பட மற்றவர்களையும் கண் கலங்க வைத்தது. இந்த சிறப்புமிக்க நிகழ்விற்கு காரணமாக அமைந்துள்ள புல்லட் 350 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதனை கடந்த 2023ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது.

royal bullet 350 bike

புல்லட் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.76 லட்சத்தில் இருந்து ரூ.2.20 லட்சம் வரையில் உள்ளன. இந்த பைக்கில் புதிய ஜே-சீரிஸ் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தந்தைக்கு இளம் வயதுடைய மகன் பரிசாக பைக்கை வாங்கி கொடுப்பது எப்போதுமே சிறப்புக்குரிய நிகழ்வாகும். அதுவும், ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கப்படுகிறது என்றால், அது இன்னும் சிறப்புமிக்க நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். மகனுக்கு தந்தை பைக் வாங்கி கொடுத்த காலம் போய், இப்போது தந்தைக்கு மகன்கள் தந்தையின் கனவு வாகனத்தை வாங்கி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2025, 13:31 [IST]
English summary
Son surprises father by gifting him royal enfield bullet 350 bike check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X