அவ்வளவு கோடி ரூபாய் சொத்து இருந்தும் செகண்ட்-ஹேண்டில் கார் வாங்கிய பெண் தொழிலதிபர் - யார் தெரியுமா இவர்?

இந்தியாவில் தங்க ஆபரணங்கள் விற்பனையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுப்படுகின்றன. உலகளவில் தங்க ஆபரணங்களுக்கு அதிக தேவை உள்ள நாடுகளுள் நம் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் சில நிறுவனங்கள் ஏறக்குறைய 100 வருடங்களாக செயல்படும் நிலையில், மிக குறைவான காலமே செயல்பாட்டில் இருந்த தங்க ஆபரண நிறுவனங்களுள் ஒன்றுதான், ஸ்வானா கோல்டுஸ்மித்ஸ் & ஜூவல்லரி ஃபேக்ட்ரி (Swana Goldsmiths & Jewelery Factory) ஆகும். 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் 2018ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்ளப்பட்டன.

ஸ்வானா கோல்டுஸ்மித்ஸ் & ஜூவல்லரி ஃபேக்ட்ரி நிறுவனத்தின் கதை முடிவுக்கு வந்தாலும், அதன் ஒருபகுதியாக இருந்த சோனா கோல்டு & டைமண்ட்ஸ் (Sona Gold and Diamonds) நிறுவனத்தின் வணிகம் இன்னமும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இத்தனைக்கும் சோனா கோல்டு & டைமண்ட்ஸ் 1984இல் இருந்து செயல்பட்டு வருகிறது.

sona mohanan kallate buys vellfire

இந்தியாவை சேர்ந்தவர்களால் சவுதி அரேபியாவில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் கிளைகள் ஓமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளிலும் செயல்படுகின்றன. சோனா கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்திற்கு தங்க மற்றும் வைர ஆபரணங்கள் நம் இந்தியாவில் இருந்துதான் செல்கின்றன. இதற்காக, கேரளாவின் திரிச்சூரில் சோனா கோல்டு & டைமண்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனம் செயல்படுகிறது.

மலையாளத்தவர்களால் அரேபிய மண்ணில் செயல்படும் தங்கம் மற்றும் வைர ஆபரண நிறுவனங்களுள் சோனாவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் 3 நிர்வாக இயக்குனர்களுள் ஒருவராக இருப்பவர் சோனா மோகனன் கல்லாடே (Sona Mohanan Kallate) ஆவார். இவர் ப்ரீ-ஓவ்ண்டு டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) காரை வாங்கியுள்ளார்.

sona mohanan kallate buys vellfire

அதாவது, புதியதாக ஒரு வெல்ஃபையர் காரை வாங்காமல், அவ்வளவு பணம் இருந்தும் வேறொருவர் பயன்படுத்தி பின் விற்ற வெல்ஃபையர் காரை வாங்கியுள்ளார். இவ்வாறு, விலையுயர்ந்த ப்ரீ-ஓவ்ண்டு கார்களை வாங்க மற்றும் விற்பனை செய்வதற்காக என்றே இந்தியாவில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. கேரளாவில் அத்தகைய நிறுவனங்கள் கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவ்வாறான ஒரு ப்ரீ-ஒவ்ண்டு லக்சரி கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக 'லக்ஸ் மோட்டோ' செயல்படுகிறது. சோனா கோல்டு & டைமண்ட்ஸின் நிர்வாக இயக்குனர் சோனா மோகனன் கல்லாடே தங்களது ஷோரூமுக்கு நேரில் வந்து காரை டெலிவிரி பெற்றதை இந்த லக்ஸ் மோட்டோ நிறுவனம் வீடியோ உடன் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

sona mohanan kallate buys vellfire

முற்றிலும் கருப்பு நிறத்திலான வெல்ஃபையர் காரை சோனா மோகனன் ஓர் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக டெலிவிரி பெற்றுள்ளார். புத்தம் புதிய வெல்ஃபையர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.22 கோடியில் இருந்து ரூ.1.33 கோடி வரையில் உள்ளன. ஹைப்ரீட் காரான இதில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடல் கடந்து வணிகம் செய்யும் தங்க & வைர ஆபரண நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ப்ரீ-ஓவ்ண்டு காரை வாங்கியுள்ளார் எனும்போது கொஞ்சம் ஆச்சிரியமாக உள்ளது. சமீப காலமாகவே, சினிமா நடிகர், நடிகைகள் உள்பட செல்வந்தர்கள் விலையுயர்ந்த கார்களை ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தியதாக வாங்கவே விரும்புகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 19:22 [IST]
English summary
Sona gold and diamonds director sona mohanan kallate buys pre owned toyota vellfire
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X