ரஜினி பட நடிகையை பாடாய்படுத்திய பிரபல நடிகர்! காருக்குள்ள நடந்த விஷயம் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு!

சாலை மார்க்கமாக நாம் செல்லும் தொலை தூர பயணங்கள் இனிமையான ஒன்று என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதிலும் குறிப்பாக நாம் நேசிக்கும் நபர்களுடன் மேற்கொள்ளும் பயணங்கள், இருவருக்கும் இடையேயான பந்தத்தை புது உயரத்திற்கு கொண்டு செல்லும். எனவே விரும்பிய நபர்களுடன் தொலை தூர பயணங்களை மேற்கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு பாலிவுட் நட்சத்திரங்களும் விதிவிலக்கு கிடையாது. பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தொலை தூர பயணங்களை அடிக்கடி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் இதற்கு பெரும்பாலும் வெளிநாடுகளைதான் தேர்வு செய்கின்றனர்.

அங்கு அவர்கள் அவ்வளவாக பிரபலம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களால் சுதந்திரமாக சாலையில் பயணிக்க முடியும். இந்த வரிசையில் பாலிவுட் நடிகை சோனாக்ஸி சின்காவும் (Sonakshi Sinha), அவரது கணவர் ஜாகீர் இக்பாலும் (Zaheer Iqbal) சமீபத்தில் சாலை மார்க்கமாக ஒரு தொலை தூர பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

Sonakshi Sinha-Zaheer Iqbal Road Trip In Car

அப்போது நடைபெற்ற ஒரு ருசிகரமான சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஜாகீர் இக்பால் கார் ஒன்றை ஓட்டி கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. அவருக்கு அருகே உள்ள இருக்கையில் சோனாக்ஸி சின்கா அமர்ந்தபடியே தூங்கி கொண்டு வந்தார்.

அப்போது அவரை எழுப்ப வேண்டும் என்பதற்காக ஜாகீர் இக்பால், பயங்கரமாக சத்தம் போட்டார். திடீரென பயங்கர சத்தம் கேட்டதும், சோனாக்ஸி சின்கா பதறியடித்து கொண்டு எழுந்தார். பின்னர் இது ஜாகீர் இக்பால் தன்னை எழுப்ப வேண்டும் என்பதற்காக செய்த விளையாட்டு என்பது தெரிந்ததும், சோனாக்ஸி சின்கா அவரை விளையாட்டாக அடிக்க தொடங்கி விட்டார்.

Sonakshi Sinha

வேடிக்கையான இந்த வீடியோவை, சோனாக்ஸி சின்கா மற்றும் ஜாகீர் இக்பாலின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். சோனாக்ஸி சின்கா பிரபலமான நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். தமிழில் கூட லிங்கா போன்ற திரைப்படங்களில் ரஜினிகாந்த் உடன் அவர் நடித்துள்ளார்.

மறுபக்கம் அவரது கணவர் ஜாகீர் இக்பாலும் ஒரு நடிகர்தான். பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அவர் உள்ளார். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அவர்களின் வீடியோ எகிப்து நாட்டிற்கு அருகே பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ வேடிக்கையானதாக இருந்தாலும் கூட, கார் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் என சோனாக்ஸி சின்கா மற்றும் ஜாகீர் இக்பால் மீது அக்கறை கொண்ட நெட்டிசன்கள் ஒரு சிலர், அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கவும் தவறவில்லை. இதில் உண்மை இருக்கவே செய்கிறது. சில சமயங்களில் ஒரு வினாடி கவனம் சிதறினாலும், விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை ஏற்று கொள்ளதான் வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாம் தற்போது காணும் வீடியோவில் சோனாக்ஸி சின்கா மற்றும் ஜாகீர் இக்பால் பயணம் செய்தது என்ன கார்? என்பது சரியாக தெரியவில்லை. இது வெளிநாடு என்பதால், வேறு யாருடைய காராக கூட இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அவர்களின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது.

பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350 (Mercedes Benz S350), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி (Mercedes Benz GLS 350d), பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி (BMW 6 SERIES GT) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எம்-க்ளாஸ் (Mercedes Benz M-Class) போன்ற கார்கள் எல்லாம், அவர்களின் கார் கலெக்ஸனில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 13:01 [IST]
English summary
Sonakshi sinha zaheer iqbal road trip in car viral video all details here
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+