1994ல் ஒரே படம் மூலம் தமிழ்நாட்டை கலக்கிய நடிகையா இது! அதுக்கு அப்புறம் காணாம போனவங்க இப்பதான் கண்ணுல பட்றாங்க

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஜிஎல்சி 300 (GLC 300) மற்றும் ஜிஎல்சி 220டி (GLC 220d) ஆகியவை ஆகும். இதில் ஜிஎல்சி 300 வேரியண்ட்டில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 258 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் ஜிஎல்சி 220டி வேரியண்ட்டில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஎஸ் பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Sonali Kulkarni Buys Mercedes Benz GLC

அத்துடன் இந்த 2 இன்ஜின்கள் உடனும், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் மெர்சிடிஸ் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. வசதிகளை பொறுத்தவரை, 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ட்யூயல் ஸோன் ஏசி போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

அத்துடன் 11.9 இன்ச் MBUX டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகள் எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் வழங்கப்பட்டுள்ளன.

Sonali Kulkarni With Her Mercedes Benz GLC

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜிஎல்சி 300 வேரியண்ட்டின் விலை 75.90 லட்ச ரூபாய் ஆகவும், ஜிஎல்சி 220டி வேரியண்ட்டின் விலை 76.90 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த 2 வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலையும் (On-Road Price) தோராயமாக 1 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மிகவும் பிரபலமாக உள்ள சோனாலி குல்கர்னி (Sonali Kulkarni) ஆவார்.

50 வயதாகும் இவருக்கு, நடிகை என்பதை கடந்து, தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பல முகங்கள் உள்ளன. புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரை சோனாலி குல்கர்னி டெலிவரி எடுக்கும்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், ஹிந்து பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து, தேங்காய் உடைத்து, காரை டெலிவரி பெறுவதை நம்மால் காண முடிகிறது. அத்துடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியும் உள்ளனர். இவர் மிகவும் பிரபலமான ஹிந்தி மற்றும் மராத்தி நடிகையாக இருந்தாலும் கூட, ஆரம்ப கால கட்டத்தில், தமிழிலும் கூட நடித்துள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டு வெளியான மே மாதம் (May Maadham) திரைப்படம் இதற்கு ஒரு உதாரணம். இந்த திரைப்படத்தில் வினித் (Vineeth) உடன், சோனாலி குல்கர்னியும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் (A.R.Rahman) இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மார்கழி பூவே (Marghazhi Poove) மற்றும் என் மேல் விழுந்த மழை துளியே (En Mel Vizhundha Mazhai Thuliyae) போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. உண்மையில் இந்த 2 பாடல்களும், மே மாதம் திரைப்படத்தில் இடம்பெற்றவை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும்.

இந்த திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை சோனாலி குல்கர்னி கொள்ளையடித்தார். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் தமிழ் திரைப்படங்களில் தலை காட்டவில்லை. ஹிந்தி மற்றும் மராத்தி உள்பட மற்ற மொழி திரைப்படங்களில் சோனாலி குல்கர்னி அதிக ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சோனாலி குல்கர்னி வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரானது, சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே சொகுசான பயணங்களை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2025, 13:29 [IST]
English summary
Sonali kulkarni buys mercedes benz glc viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+