2.12 கோடி ரூபா காரை வாங்கியது இந்த நடிகையா! காருல இருந்து சும்மா ஸ்டைலா இறங்கினத பாக்கணுமே.. மெர்சலாயிட்டாங்க!

பாலிவுட் நடிகர்களின் காட்டில் மட்டும் பண மழை கொட்டுதா என்ன.. என கேட்கும் அளவிற்கு அந்த திரையுலகைச் சார்ந்த பலர் ஆடம்பர கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவரான சோனம் கபூர், மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கிய சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. அந்த நடிகை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) காரையே வாங்கியிருக்கின்றார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த மாடலின் 740ஐ எம் ஸ்போர்ட் (740i M Sport) வேரியண்டையே அவர் வாங்கியிருக்கின்றார்.

இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 2.12 கோடி ரூபாக்கும் அதிகம் ஆகும். பாலிவுட் திரை உலகின் ஜாம்பவான் நடிகை என சோனம் கபூரை கூறலாம். இவர் அனில் கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. நூற்றுக் கணக்கான பிளாக்பஸ்டர் படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.

Sonam s new ride bmw 7 series

இதுதவிர, எண்ணற்ற சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் அவர் வென்றிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையின் சிறந்த 100 நடிகர்களின் பட்டியலிலும் இவர் இடம் பிடித்திருக்கின்றார். இத்தகைய முன்னணி நடிகையே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற மற்றும் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கி அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கின்றார்.

அவர் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட 740ஐ எம் ஸ்போர்ட் கார் மாடலையே வாங்கியிருக்கின்றார். இன்னும் அந்த வாகனம் பதிவுகூட செய்யப்படவில்லை என தெரிகின்றது. இந்திய பிரபலங்கள் பலரின் பிரியமான கார் மாடலாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இருக்கின்றது. சொல்லப்போனால் முன்னணி பிரபலங்கள் பலரின் வீட்டில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

மேலும், அனில் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் வீட்டிலும் இந்த ஆடம்பர கார் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் வாகனத்தின் உரிமையாளராக மாறியிருக்கின்றார் சோனம் கபூர். அதிக ஆற்றலை வெளிப்படுத்துவது மற்றும் அதிக லக்சூரி அம்சங்களை தாங்கியிருப்பது என அனைத்திற்கும் பெயர்போன தயாரிப்பாகவே பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளது.

தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் மாடல் மிக தாராளமாக தன்னுள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், இந்த காரில் பயணத்தை மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 31.3 அங்குல 8கே வசதிக் கொண்ட தியேட்டர் போன்ற திரை வழங்கப்பட்டு இருக்கும். அத்துடன் கூடுதல் சிறப்பாக அமேசான் ஃபையர் டிவி இன்-பில்ட்டாக வழங்கப்பட்டு இருக்கும்.

இது பின்னிருக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கை வழங்கும் வகையிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 14.9 அங்குல பிஎம்டபிள்யூ வளைவான திரை, இன்டரேக்சன் பார் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கும். மேலும், 36 ஸ்பீக்கர் போவர்கள் மற்றும் வில்கின்ஸ் டைமைண்ட் சவுண்ட் சிஸ்டம், 4டி ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் உடன் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மேலும், 5.5 அங்குல டச் வசதிக் கொண்ட திரை இரண்டு டோர்களின் பேனல்களிலும் வழங்கப்பட்டு இருக்கும். இது சில முக்கிய அம்சங்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இவற்றுடன், பிஎம்டபிள்யூ டிஜிட்டல் சாவி, ரிமோட் சாஃப்ட்வேர் அப்கிரேட், அடாப்டீவ் 2 ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், முன்னதாக கூறியதைப் போலவே இந்த காரில் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 3.0 லிட்டர் இன்லைன் 6 டர்போ பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 381 எச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க வெறும் 5.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள், குறிப்பாக,பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிகளவில் சொகுசு கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சான்றாகவே சோனம் கபூர் காரை வாங்கிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இவரை இன்னும் பலர் சமீப நாட்களில் சொகுசு காரை வாங்கியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 15, 2024, 5:00 [IST]
English summary
Sonam kapoor expands her impressive car collection with new bmw 7 series worth rs 2 12 crore
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+