என்னங்க பெரிய கிளியோபாட்ரா! இந்த காருல வந்து இறங்கினதுல இந்த நடிகையோட இமேஜ் எங்கேயோ போயிருச்சு! என்ன கார் அது?

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் சோனம் கபூரும் ஒருவர் ஆவார். இவரே சமீபத்தில் விலை உயர்ந்த காரை பயன்படுத்தியதன் வாயிலாக அவருடையே இமேஜை மேலும் கூட்டி இருக்கின்றார். அப்படி என்ன காரை அவர் பயன்படுத்தினார்? அதன் விலை எவ்வளவு? என்பது பற்றிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலக புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சோனம் கபூர் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. பாலிவுட் திரை உலகில் மிகப் பெரிய அந்தஸ்தைக் கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Sonam kapoor land rover defender

இவரிடத்தில் ஏற்கனவே விலை உயர்ந்த கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 சொகுசு காரில் வலம் வந்ததாகக் கூறப்படுகின்றது. இது அவரின் இமேஜிற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏனெனில், இந்தியாவில் ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதுவும் பெரும் கோடீஸ்வரர்களும், செல்வந்தர்களும் மட்டுமே அக்கார் மாடலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நம்முடைய முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மாகர் மாடலையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இத்தகைய மிகவும் ஸ்பெஷலான காரிலேயே பாலிவுட் நடிகை சோனம் கபூர் வலம் வந்திருக்கின்றார்.

Sonam kapoor

இந்த காரை அவர் வெகு சமீபத்திலேயே வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்முக வேரியண்டுகளில் இந்த கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. டிஃபெண்டர் 90, டிஃபெண்டர் 110 மற்றும் டிஃபெண்டர் 130 ஆகியவை அவை ஆகும். இதில் டிஃபெண்டர் 130 லேட்டஸ்ட் வருகை ஆகும்.

இது ஓர் 5 டோர்கள் கொண்ட வெர்ஷனும் கூட. இதேபோல், எஞ்ஜின் விஷயத்திலும் பன்முக தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. பெட்ரோலிலேயே இரண்டு விதமான தேர்வுகளும், டீசலில் ஒற்றை ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.

2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டார் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதேபோல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் ஏராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த காரில் சொகுசு வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனால்தான், லக்சூரி அம்சங்களை அதிகம் விரும்புவோர் மத்தியில் இந்த காருக்கு டிமாண்ட் மிக அமோகமாக தென்படுகின்றது. இந்த காரை குறிப்பாக திரை நட்சத்திரங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், அமிதாப் பச்சன், கரினா கபூர், சுனில் ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ராம் சரண், ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், அர்ஜூன் கபூர் மற்றும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி என ஏகப்பட்டோர் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் மட்டுமில்லைங்க, விஜய் வசந்த் மற்றும் பதாஞ்சலி பாபா ராம்தேவ் போன்ற முக்கிய பிரபலங்களும் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தரமான கார் மாடலையே முன்னணி நடிகையான சோனம் கபூர் தற்போது வாங்கி இருக்கின்றார். இவரிடத்தில் இந்த கார் மட்டுமில்லைங்க, மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் கேரவன் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஹைபிரிட் எம்பிவி போன்ற உல்லாச கப்பல் மாதிரியான கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் ஆடம்பர கார்களுக்கு அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சோனம் கபூர் லேட்டஸ்டாக இந்த விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கிய காரின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பே ரூ. 2.30 கோடி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 6, 2023, 23:34 [IST]
English summary
Sonam kapoor seemed with land rover defender 110 here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+