2 வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு காணாம போன தனுஷ் பட நடிகையா இது! இப்ப 2 கோடி ரூபா கார்ல போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). திரையுலக நட்சத்திரங்கள் அதிகம் வாங்க கூடிய கார்களில் ஒன்றாக இது உள்ளது. சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளை அதிகளவில் கொண்டிருப்பது இதற்கு காரணமாக கருதப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், 2 வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 10 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற அம்சங்களை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் கொண்டுள்ளது. இது போன்ற காரணங்களால்தான், திரையுலகினர் இந்த காரை அதிகளவில் வாங்குகின்றனர்.

Sonam Kapoor Spotted In Mercedes Benz S-Class

இதற்கு நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) போன்ற நட்சத்திரங்களை உதாரணமாக கூற முடியும். இந்த வரிசையில் பாலிவுட் நடிகை சோனம் கபூரும் (Sonam Kapoor) மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ளார். இவர் தனுஷ் (Dhanush) உடன் இணைந்து அம்பிகாபதி (Ambikapathy) திரைப்படத்தில் நடித்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீப காலமாக சோனம் கபூர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. கடந்த 2023ம் ஆண்டிற்கு பிறகு அவர் நடிப்பிற்கு தற்காலிகமாக முழுக்கு போட்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்திருப்பதுதான் இதற்கு காரணம். குழந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெள்ளி திரையில் இருந்து அவர் காணாமல் போயுள்ளார். ஆனால் இது தற்காலிகமானது மட்டுமே.

Mercedes Benz S-Class

மீண்டும் நடிக்க வருவேன் என அவர் ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். வெள்ளி திரையில் இருந்து காணாமல் போயிருந்தாலும், பொது இடங்களில் அவ்வப்போது சோனம் கபூர் தலைகாட்டி கொண்டுதான் உள்ளார். இதன்படி பொது இடத்திற்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் வந்தபோது சோனம் கபூர் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளார்.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் எஸ் 350டி (S 350d) வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.79 கோடி ரூபாய் வருகிறது.

ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 2.10 கோடி ரூபாய் வரும். இந்த காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சோனம் கபூரிடம் இதுதவிர லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) மற்றும் போர்ஷே டைகன் எஸ் (Porsche Taycan S) போன்ற விலை உயர்ந்த கார்களும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நடிகை சோனம் கபூர் தற்போது பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார், ஆடி ஏ8 (Audi A8) மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 13:49 [IST]
English summary
Sonam kapoor spotted in mercedes benz s class viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+