வில்லன் கேரக்டரில் கலக்கிய நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா? கார்ல கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்!
இந்தி சினிமாவில் பிரபல நடிகரான சோனு சூட் மனைவி சோனாலி சூட் நேற்று இரவு மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். இவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது எப்படி? விபத்தில் சிக்கிய சோனுசூட் மனைவி தற்போது எப்படி இருக்கிறார். இது போன்ற விபத்துக்களை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
இந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சோனு சூட், இவர் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட இவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது. இதனால் இவர் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது மனைவி சோனாலி சூட் தனது உறவினர்களுடன் தனது புதிய காரான விண்ட்ஸர் இவி காரில் மும்பையிலிருந்து நாக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராத விதமாக இவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. இதில் இவரின் காரின் முன்பகுதி பெரிய அளவில் சேதமானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சோனாலிசூட் மற்றும் அவரது உறவினர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய இவர்களை அங்கிருந்தவர்கள் மீது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவர் நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடந்தது என தெரியவில்லை. ஆனால் விபத்தில் சிக்கிய காரின் நிலைமையை வைத்து பார்க்கும் போது ஒரு லாரியின் பின்புறம் சென்று கார் மோதியிருக்கலாம் என தெரிகிறது. இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் லாரி போக்குவரத்து அதிகமாக இருந்திருக்கும் லாரியை முந்தும் முயற்சியில் இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது.
சோனு சூட் மனைவி சோனாலி சூட் விபத்தில் சிக்கும் போது அவர் எம்ஜி நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி காரில் பயணித்துக்கொண்டிருந்தார். இந்த காரை யார் ஒட்டி வந்தார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. விசாரணை முடிந்த பிறகு தான் இந்த தகவல் எல்லாம் தெரிய வரும். ஆனால் விண்ட்ஸர் இவி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காராக இருக்கிறது. இந்த காரில் பல்வேற அம்சங்கள் இருக்கிறது. இது பலரை கவர்ந்த காராகவும் உள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் விண்ட்ஸர் காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த கார் ரூ13.50 லட்சம் முதல்ரூ15.50 லட்சம் எ்னற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை பேட்டரி அஸ் சர்வீஸ் முறையிலும் வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கினால் பேட்டரியை சொந்தமாக்க முடியாது. ஒவ்வொரு மாதமும் பேட்டரிக்கான பணத்தை செலுத்த வேண்டும்.
பேட்டரி பயன்பாடு என்பது நீங்கள் எவ்வளவு தூரம் ஒட்டுகிறீர்கள் என்பதை பொருத்து கட்டணம் மாறுபடும். உதாரணமாக ஒரு கி.மீ பயணித்தால் ரூ3.5 முதல் நீங்கள் பேட்டரிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் பேட்டரி குறிப்பிட்ட அளவிற்கு மேல் சேதமானாலும் நீங்கள் கையிலிருந்து பணம் கொடுத்து பேட்டரியை மாற்ற வேண்டாம். மாறாக அந்நிறுவனமே பேட்டரியை மாற்றி தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் செல்லும் போது எப்பொழுதும் கவனமாக செல்ல வேண்டும். நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் அதிக வேகமாக பயணிக்கும் அந்த நேரங்களில் கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும். நாம் செய்யும் சிறு தவறு மற்றும் கவனக்குறைவால் பெரிய விபத்துக்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.அதற்கு இந்த விபத்து தான் ஒரு உதாரணம்


Click it and Unblock the Notifications








