நாளைக்கு காலேல பெரிய நடிகர்கள்லாம் இந்த 22 வயசு பொண்ணு வீட்ல நிக்க போறாங்க! பட ரீலிசுக்கு முன்னாடியே இப்படியா!
இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார்களை சர்வ சாதாரணமாக வாங்குபவர்களில் திரைத்துறையினர் மிகவும் முக்கியமானவர்கள். நாட்டின் அனைத்து மொழி திரையுலகிலும், விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கு மலையாள திரையுலகமும் விதிவிலக்கு அல்ல. பஹத் ஃபாசில் (Fahadh Faasil), துல்கர் சல்மான் (Dulquer Salmaan) உள்ளிட்டவர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில், மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகை ஒருவர், தற்போது மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) காரை வாங்கியுள்ளார்.
நடிகை சானியா ஐயப்பன் (Saniya Iyappan) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இவருக்கு தற்போது வெறும் 22 வயது மட்டுமே ஆகிறது. மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் சானியா ஐயப்பன் நடித்துள்ளார். தமிழில் இறுகப்பற்று உள்ளிட்ட திரைப்படங்களில் சானியா ஐயப்பன் நடித்துள்ளார்.

அத்துடன் ஆர்ஜே பாலாஜி (RJ Balaji) மற்றும் செல்வராகவன் (Selvaraghavan) உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் (Sorgavaasal) திரைப்படத்திலும் சானியா ஐயப்பன் நடித்துள்ளார். இந்த படம் நாளைதான் (நவம்பர் 29) வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிறகு, சானியா ஐயப்பனுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மினி கூப்பர் எஸ் காரை, சானியா அய்யப்பன் வாங்கியுள்ளார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மினி கூப்பர் எஸ் காரின் விலை 44.90 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 52 லட்ச ரூபாய் வரும். செயல்திறனை பொறுத்தவரையில் மினி கூப்பர் எஸ் காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மினி கூப்பர் எஸ் காரில் அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இதில், டிரைவர் இருக்கையில் மசாஜ் வசதி, 9.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மேலும் கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியண்ட் லைட்டிங், 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகளும் கூட, மினி கூப்பர் எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிக இளம் வயதிலேயே மினி கூப்பர் எஸ் போன்ற ஒரு விலை உயர்ந்த காரை நடிகை சானியா ஐயப்பன் வாங்கியிருப்பது பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் அவர் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








