இவங்க குடும்பத்தில் என்ன ஒவ்வொரு பொருளா காணா போகுது... தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இணையத்தில் பலரால் பேசப்படும் பொருளாகி உள்ள இந்த விஷயத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் குடும்பத்தில் சமீப காலமாக துரதிர்ஷ்டம் சுற்றி சுற்றி அடிக்கிறது போல. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளை காணவில்லை என ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இது அந்த சமயத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

soundarya rajinikanth missed her car key

பின்னர் போலீஸ் விசாரணையில், ஐஸ்வர்யாவின் வீட்டில் பணிப்புரிந்த பெண் மற்றும் கார் ஓட்டுனர் இருவரும் தான் திட்டமிட்டு இந்த திருட்டை நடத்தியது தெரிய வந்தது. அதன்பின் அவர்கள் இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த பரபரப்பு அடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இன்று (மே 10) தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

சௌந்தர்யாவின் இந்த புகாரில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது தனது பர்ஸ் தொலைந்துவிட்டதாகவும், அதனுள் காரின் ஸ்பேர் சாவி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் புகாரை ஏற்றுக்கொண்ட தேனாம்பேட்டை போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

soundarya rajinikanth missed her car key

இந்த சம்பவத்தில் தொலைந்து இருப்பது சௌந்தர்யாவின் ரேஞ்ச் ரோவர் காரின் சாவி என கூறப்படுகிறது. இவரிடம் எந்த மாடல் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது என்பது சரியாக தெரியவில்லை. ஏனெனில் இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் ரேஞ்ச் ரோவர் வேலார் என 4 விதமான ரேஞ்ச் ரோவர் மாடல்கள் தற்சமயம் விற்பனையில் உள்ளன. இவை நான்கும் தோற்றத்தில் சிறிதே வித்தியாசப்படுகின்றன.

ஆனால் தொழிற்நுட்ப அம்சங்களில் இவை நான்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஏனெனில் ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால் ரேஞ்ச் ரோவர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.4.17 கோடி வரையில் உள்ளது. இந்த விலைக்கேற்ப இவற்றில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களும் மாறுப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஸ்பேர் கீ தானே தொலைந்துப்போய் உள்ளது, மற்றொரு சாவி உள்ளதே என அசால்ட்டாக இருந்துவிட முடியாது. ஏனெனில் தற்செயலாக சாவி தொலைந்து இருந்தால் பரவாயில்லை. ஆனால் வேண்டுமென்றே சாவியை யாராவது எடுத்திருந்தால், பின்னர் காரும் தொலைந்து போகுவதற்கு வாய்ப்புள்ளது. மேலே பார்த்தோம், ரேஞ்ச் ரோவர் கார்கள் ஒவ்வொன்றின் விலையும் லட்சங்களில் இருந்து கோடி வரையில் உள்ளன. ஆதலால் சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தது நல்ல காரியமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 10, 2023, 14:42 [IST]
English summary
Soundarya rajinikanth missed her range rover car key
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+