இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! வீட்டில் 2 பென்ஸ் கார் நிற்குது... என்ன தொழில் பார்க்கிறார்?

டீடெயிலிங் டெவில்ஸ் (Detailing Devils), இந்தியாவின் முன்னணி கார் அலங்கரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவர் சவுரப் அஹுஜா. தினந்தோறும் கார்களுடனே வாழ்க்கையை ஓட்டும் இவரிடம் உள்ள லக்சரி கார் கலெக்‌ஷனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டீடெயிலிங் டெவில்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மெக்கானிக் கடைகள் உள்ளன. இத்தகைய நிறுவனத்தை நிறுவியவரான சவுரப் அஹுஜாவின் வீட்டிற்கே நேரடியாக சென்று பெண் ஒருவர் சவுரப்பின் லக்சரி கார் கலெக்‌ஷன்களை பார்வையிட்டுள்ளார். மேலும், அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி தனது யூடியுப் சேனலிலும் பதிவேற்றி உள்ளார்.

detailing devils founder car collections

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி 43 ஏஎம்ஜி கூபே (Mercedes-Benz GLC 43 AMG Coupe): பளபளப்பான கருப்பு நிறத்தில் இந்த காரை சவுரப் அஹுஜா வைத்துள்ளார். இதற்கு ஏறக்குறைய ரூ.1 கோடியை செலவு செய்துள்ளதாக கூறும் இவர், இந்த காரின் சாய்வான மேற்கூரையினால் கவரப்பட்டு இந்த காரை வாங்கியதாக தெரிவித்துள்ளார். 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் இந்த பென்ஸ் காரில் உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் ஜி400டி (Mercedes-Benz G-Wagon G400D): உலகிலேயே விலையுயர்ந்த ஆஃப்-ரோடு வாகனம் இதுவாகும். இதனை ரூ.3 கோடி செலவில் வாங்கியுள்ளதாக கூறும் சவுரப் அஹுஜா, ஜி-வேகன் காரை ஜி400டி வேரியண்ட்டில் வைத்துள்ளார். ஆனால், இந்த வேரியண்ட்டை காட்டிலும் ஜி63 வேரியண்ட் தான் உலகம் முழுவதும் பிரபலமானதாக உள்ளது.

detailing devils founder car collections

இந்த வேரியண்ட்டில் ஜி-வேகன் வாகனத்தை ஏன் வாங்கவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜி-வேகன் ஜி63 வாகனத்தை வாங்க மிகவும் முயற்சி செய்ததாகவும், ஆனால் ஒரு வாகனம் கூட கிடைக்கவில்லை எனவும் சவுரப் அஹுஜா பதிலளித்துள்ளார். ஜி-வேகன் ஜி400டி வாகனத்தை அடாப்டிவ் இருக்கைகளுடன் இவர் வாங்கியுள்ளார். அதாவது, வாகனம் வளைவுகளில் திரும்பும்போது இந்த இருக்கைகள் கூடுதல் இறுக்கத்தை கொடுக்கும்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport): உலகம் முழுவதும் பிரபலமான இந்த ரேஞ்ச் ரோவர் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் வாங்கியதாக சவுரப் அஹுஜா தெரிவித்துள்ளார். இந்த வாகனத்திற்காக ரூ.2.05 கோடியை இவர் செலவு செய்துள்ளார். இந்த காரின் 22-இன்ச் அலாய் சக்கரங்களுக்காக மட்டும் கூடுதலாக ரூ.15 லட்சத்தை செலவு செய்துள்ளார். சவுரப் அஹுஜாவிடம் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் சாண்டோரினி கருப்பு நிறத்தில் உள்ளது.

detailing devils founder car collections

கியா இவி6 ஜிடி (Kia EV6 GT): டீடெயிலிங் டெவில்ஸ் நிறுவனர் சவுரப் அஹுஜாவிடம் இருக்கும் ஒரேயொரு எலக்ட்ரிக் கார் இதுவாகும். ஆனால், இந்த ஒரேயொரு எலக்ட்ரிக் காரை கூட நன்கு விலையுயர்ந்ததாக இவர் வாங்கியுள்ளார். இந்த கியா எலக்ட்ரிக் காருக்காக இவர் செலவு செய்திருப்பது ரூ.67 லட்சம் ஆகும்.

கியா இவி6 காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் ரேஞ்ச் ஆகும். அதாவது, இந்த காரை 100% சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக சுமார் 700கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என கியா தெரிவிக்கிறது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சவுரப் அஹுஜா, கியா தெரிவித்ததில் பாதி ரேஞ்ச் மட்டுமே கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

detailing devils founder car collections

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா இவி6 ஜிடி காரை தவிர்த்து, சவுரப் அஹுஜாவின் மற்ற 3 கார்களிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் அவை மூன்றும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளன. இவி6 எலக்ட்ரிக் கார் கருப்பு நிறத்தில் விற்கப்படுவதில்லை. இல்லையென்றால், அதனையும் கருப்பு நிறத்தில் சவுரப் வாங்கியிருப்பார். அடுத்ததாக, ஃபெராரி 296 ஜிடிபி மற்றும் லம்போர்கினி ஹூராகென் கார்களை வாங்க சவுரப் அஹுஜா திட்டமிட்டு வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 12:56 [IST]
English summary
Sourabh ahuja detailing devils founder luxury car collections
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X