உயர்தர உணவகம், கேளிக்கை விடுதி, 5 ஸ்டார் உபசரிப்பு கொண்ட மஹாராஜா எக்ஸ்பிரஸ்: தென்னிந்தியா வருகிறது!

இந்தியாவின் சுற்றுலா துறையை மேம்படுத்த இரயில்வே நிர்வாகம் மஹாராஹா எக்ஸ்பிரஸ் இரயில்சேவையை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

By Azhagar

ஆடம்பர வசதிகளை தரும் 'மஹாராஜா எக்ஸ்பிரஸ்' ரயில்சேவையை தென்னிந்தியாவில் உருவாக்கும் முயற்சியில் இந்திய இரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்திய ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி கழகம் இணைந்து ஆடம்பர பயணங்களுக்கான 'மஹாராஜா எக்ஸ்பிரஸ்' ரயில்சேவையை வழங்கி வருகிறது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்தியப் பராம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்களை தாங்கி வாழும் நகரங்களுக்கு எல்லாம் இந்த மஹாராஜா ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்தியாவில் தொன்மை அடையாளங்களை அறிய விரும்பும் சுற்றுலா வாசிகள் மற்றும் பயணிகளின் முதல் தேர்வாக தற்போது மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயில்சேவை உள்ளது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

கடந்த 2010ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில்சேவையில் ஆடம்பர பயணத்திற்கு குறைவில்லாத பல அம்சங்கள் உள்ளன.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

14 இரயில் பெட்டிகள் கொண்ட இந்த இரயிலில் 88 பயணிகள் வரை தங்கலாம். மேலும் வசதிகளுக்கு ஏற்ப இந்த இரயிலில் டீலக்ஸ், ஜூனியர், ஆதித ஆடம்பரம் என மூன்று வகுப்புகள் உள்ளன.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

அதிக சுவை நிறைந்த உயர் ரக உணவுகளை பரிமாறும் மூன்று உணவகங்கள் மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில் சேவையில் அமைக்கப்பட்டு இருப்பது இதன் தனிச்சிறப்பு.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்த உணவகங்களில் 42 விருந்தினர்கள் வரை தங்கிக்கொள்ளும் வசதியும் கூடுதலாக உள்ளன. இதில் கிடைக்கும் வசதிகளும் 5 ஸ்டார் உபசரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்து மகிழ்வதற்காக மஹாராஜா எக்ஸ்பிரஸ் 2 ஆடம்பரமான பார் வசதிகளும் உள்ளன. இந்தியாவில் முதன்முதலாக அறிமுகமான மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில்சேவை 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

முதல் மஹாராஜா எக்ஸ்பிரஸ் ஆடம்பர ரயில் டெல்லியில் தொடங்கி ஜோத்பூர், உதய்பூர், ஆக்ரா, ஃபத்தேபூர் சிக்ரி போன்ற நகரங்களுக்கு பயணித்து இறுதியாக லக்னோவை சென்றடையும்.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

வட இந்தியாவில் மட்டும் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில்சேவை விரைவில் தென்னிந்தியப் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய ரயில்வே துறை மற்றும் ஐ.ஆர்.சி.டிசி, தென்னிந்தியாவில் 2 வழித்தடங்களில் மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளன.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

’சதர்ன் சொஜோர்ன்’ , ’சதரன் ஜுவல்ஸ்’ என்ற பெயரில் மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில்கள் தென்னிந்தியாவின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் இயக்கப்படவுள்ளன.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் மும்பை முதல் திருவனந்தபுரம் இடையிலான 'சதர்ன் சொஜோர்ன் மஹாராஜா எக்ஸ்பிரஸ்' துவக்கப்படுகிறது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்த இரயில் மும்பையில் ஆரம்பித்து, கோவா, ஹம்பி, மைசூரு, ஆலப்புழா ஆகிய நகரங்களில் பயணித்து இறுதியாக திருவனந்தபுரம் வந்தடையும்.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

ஜூலை 1ம் தேதி முதல் திருவனந்தபுரம் முதல் கோவா இடையிலான 'சதர்ன் ஜூவல்ஸ் மஹாராஜா எக்ஸ்பிரஸ்' இயக்கப்படுகிறது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்த ரயில் செட்டிநாடு (காரைக்குடி) மகாபலிபுரம் உட்பட தமிழக பகுதிகளுக்கு சென்று மைசூரு, ஹம்பி, கோவா வழியாக இறுதியில் மும்பை சென்றடையும்.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில் செல்லும் ஒவ்வொரு வழித்தடத்திலும், இந்தியாவின் கலாச்சார பெருமைகளை உணர்த்தும் பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

ஜூன் மற்றும் ஜூலையில் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டு, செப்டம்பர் முதல் சதர்ன் சொஜோர்ன், சதர்ன் ஜூவல்ஸ் மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில் சேவை பொதுமக்களின் பயன்பட்டிற்கு தொடங்கப்படவுள்ளது.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

சுற்றுலாவிற்கான அடையாளங்களுடன் பயணிப்பதால், மஹாராஜா எக்ஸ்பிரஸ் இரயில் 7 முதல் 8 நாட்கள் வரை பயணித்து இறுதியாக சேரும் இடத்தை அடையும்.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

குறைந்தது 2 முதல் 3 நாட்களுக்கான பயணத்திற்கு இருவருக்கு கட்டணமாக ரூ.33,250/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒருவருக்கான கட்டணம் ரூ.53,200/-.

ஆடம்பர ’மாஹாராஜா எக்ஸ்பிரஸ்’ தென்னிந்தியா வருகிறது

இந்தியாவில் ஆடம்பர பயணங்களை வழங்கக்கூடிய 4 எக்ஸ்பிரஸ் இரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.

இதேபோல் இதே பட்டியலில் துரந்தோ, ராஜ்தானி, சாத்ப்தி போன்ற அதிகவேக இரயில்சேவையும் அடங்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
South India Gets Luxury Maharajas Express in two new Lines. The train also features two restaurants and 2 lounge bars. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X