சாலையில் வலம் வந்த அதிசய கார்! அவரோடதா இது! இதுக்கு முன்னாடி இந்தியால இப்படி ஒரு காரை ஒருத்தரும் பாத்தது இல்ல!

இந்தியாவிற்கான தென் கொரிய தூதராக பணியாற்றி வருபவர் சங் ஜே-போக் (Chang Jae-bok). இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ஜெனிஸிஸ் ஜிவி 80 (Genesis GV 80) ஆகும். இப்படி ஒரு காரை கேள்விபட்டதே இல்லையே என நீங்கள் மனதிற்குள் நினைப்பது புரிகிறது.

உங்கள் சந்தேகம் சரிதான். இது இந்திய சந்தையில் விற்பனையிலேயே இல்லாத ஒரு கார். ஆனால் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெனிஸிஸ் என்பது தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும். அதாவது ஹூண்டாய்தான், ஜெனிஸிஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் (Parent Company).

South Korean Ambassador To India Chang Jae-bok Buys Genesis GV 80

ஜெனிஸிஸ் பிராண்டின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. சரி, ஜெனிஸிஸ் நிறுவனம் பற்றிய அடிப்படை தகவல்கள் தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த நிறுவனத்தின் ஜிவி 80 காரானது, சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

சர்வதேச சந்தைகளில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) உள்ளிட்ட கார்களுடன், ஜெனிஸிஸ் ஜிவி 80 போட்டியிட்டு வருகிறது. சர்வதேச சந்தைகளில் இதன் விலை இந்திய மதிப்பில் 65 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (Turbo Petrol Engine) ஒன்றாகும். அதிகபட்சமாக 300 ஹெச்பி பவர் மற்றும் 421 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 375 ஹெச்பி பவர் மற்றும் 530 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆப்ஷனும் ஜெனிஸிஸ் ஜிவி 80 சொகுசு காரில் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காரில் அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இதில், 14.5 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சொகுசு வசதிகள் நிரம்பிய இந்த காரை வாங்கிய உடனேயே இந்தியாவில் உள்ள தென் கொரிய தூதரகத்தில் வைத்து இந்திய வழக்கப்படி பூஜை போட்டுள்ளார் தூதர் சங் ஜே-போக்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடப்பு 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஜெனிஸிஸ் ஜிவி 80 கார், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. எனவே வரும் காலங்களில், இந்திய சந்தையிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 12:42 [IST]
English summary
South korean ambassador to india chang jae bok buys genesis gv 80 viral video all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+