இது கேரளா எல்லாம் இல்ல சென்னைன்னு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க! எந்த இடம் தெரியுமா?

தென்னக ரயில்வே நிர்வாகம் அப்போது ரயில்வே கட்டுமான அம்சங்களை வெளிக்காட்டும் வகையிலான வீடியோக்களை தங்கள் எக்ஸ தள பக்கத்தில் வெளியிடுவார்கள். இப்படியாக சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் சொன்ன விஷயம் தான் பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இது என்ன வீடியோ இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தென்னக ரயில்வே நிர்வாகம் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் செய்து வரும் பணிகள் மற்றும் அறிவிப்புகள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருவார்கள். இதில் பல்வேறு விதமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். சில நேரம் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட இந்திய ரயில்வே நிர்வாகத்தின் கட்டுமானங்களை காட்டும் வகையில் வீடியோ காட்சிகளையும் எடுத்து வெளியிடுவார்கள்.

southern railway

இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வே நிர்வாகம் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட மதுரை திருமங்கலம் சுங்கச்சாவடி பகுதி ரயில்வே பாதையை வீடியோவாக வெளியிட்டு இருந்தது. இந்த காட்சியை பார்க்கும்போது ரம்மியமாக இருந்தது. முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இது எந்த இடம் என்றே தெரியாத அளவிற்கு அழகாகவும் இருந்தது.

பலர் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த சுங்கச்சாவடி மற்றும் பாலம் ஆகியவற்றை பார்த்த பிறகு இது மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள சாலை மற்றும் ரயில் பாதை என கண்டுபிடித்தார்கள். மற்ற எந்த விஷயமும் இது மதுரை என்பதை காட்டும் அளவிற்கு இல்லை. அந்த அளவுக்கு வித்தியாசமான கோணத்தில் இருந்தது இப்படியாக மற்றொரு வீடியோ காட்சியை தற்போது தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

southern railways

அதன்படி தற்போது வெளியிட்டுள்ள காட்சியில் சிறிய மலைப்பகுதிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் வந்தே வாரத்தில் ஒன்று சீறி பாய்ந்து வருகிறது. இதை பல்வேறு கோணங்களில் ட்ரோன் மூலம் வீடியோ காட்சி எடுத்து அந்த வீடியோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கிறது முற்றிலும் பசுமையான சூழ்நிலையில் ரயில் பயணிப்பது போல தோன்றுகிறது.

இந்த காட்சி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இடம்தான் ஹைலைட். இந்த காட்சியை பார்க்கும் போது இதில் உள்ள பசுமை தன்மையை பார்த்து இது ஏதோ கேரளா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று பலர் கருதி இருப்பார்கள். ஆனால் இந்த காட்சி எடுக்கப்பட்டதாக தென்னக ரயில்வே கூறும் இடம் பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

southern railways

சென்னை மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்தே பாரத் ரயில் பயணிக்கும் போது இந்த காட்சியை எடுத்ததாக தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள மலைப்பகுதி மற்றும் அதற்கு கீழ் உள்ள ரயில் தண்டவாள பகுதிகள்தான் இந்த காட்சியில் இடம்பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த காட்சிகள் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. இதில் வந்தே பாரத் ரயில் சீறிப் பாய்கிறது. இதை பார்த்த பலர் இது சென்னை தானா என இன்னும் நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் இந்த வீடியோ காட்சிகளை பார்த்து வருகிறார்கள். பல இதை நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

தென்னக ரயில்வே நிர்வாகம் இதுபோல வரிசையாக பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் தென்னக ரயில்வே நிர்வாகம் தமிழகம் உள்ளிட்ட தென்னக பகுதிகளில் ரயில்வே கட்டுமானத்தை சிறப்பாக மேம்படுத்தி வருகிறது. இங்கு பல்வேறு விதமான இடங்களில் பணிகள் துரிதமாக நடந்துள்ளன. அதை ஆவணப்படுத்துவதற்காகவே இந்த வீடியோக்களை எல்லாம் எடுத்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னக ரயில்வே நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் இயக்குவதிலும் ரயில்கள் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதிலும் பல்வேறு விதமான நூதனங்களை கையாண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதை பறைசாற்றும் வகையில் இப்படியாக வீடியோக்களை எடுத்து வெளியிட்டு மக்களை கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்னும் தென்னக ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தால் தென்னிந்தியாவில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 15:48 [IST]
English summary
Southern railway viral video chennai track drone view
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X