பிரம்மாண்ட கைகள்! 50 லட்சம் கிலோ எடையுள்ள ராக்கெட்! இஸ்ரோவே வாயை பிளந்து பார்த்த அதிசயம்!

உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது வழக்கம் இப்படியாக விண்ணில் ஏவப்படும் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் என்ற கேள்வி பலருக்கு இருந்தது. ஆனால் இதுவரை அப்படியான ராக்கெட்டுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இப்படியாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு செய்யும் நிறுவனமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட்டுக்கான ஹெவி பூஸ்டர் பகுதியை விண்ணில் ஏவி மீண்டும் அதை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

SpaceX catches Starship booster

பூஸ்டர் ராக்கெட் என்பது அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு முதற் கட்ட இன்ஜின் ஆகும் இந்த இன்ஜின் தற்போது சாலிட் ஸ்டேட் புரோபலென்ட் இன்ஜினாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அதிக எடையை பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு புவி ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் இடம் வரை எடுத்துச் செல்லும் ராக்கெட் ஆகும். இதனால் இது அதிக எரிபொருளையும் அதிக திறனையும் வெளிப்படுத்தக்கூடிய ராக்கெட்டாக உருவாக்கப்படும்.

தற்போது பயன்படுத்தப்படும் சாலிட் ஸ்டேட் புரொபெலன்டிற்க்கு பதிலாக இந்த பூஸ்டர் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட சாலிட் ஸ்டேட் புரொபெலன்ட் ஒரு முறை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் பூஸ்டர் ராக்கெட்டுகளை நிறுவனம் உருவாக்கி உள்ளது.

SpaceX catches Starship booster

இதை தான் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஏவு தளத்தில் வைத்து சோதனை செய்தது. இந்த சோதனையின் போது பூமியிலிருந்து சுமார் 400 அடி மீட்டர் உயரம் வரை இது பறந்து மீண்டும் பத்திரமாக பூமிக்கு திட்டமிட்டபடி வந்து இறங்கியது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 7 நிமிடங்களில் மீண்டும் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தது.

இந்த ராக்கெட் சுமார் 50 லட்சம் கிலோ எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் ஆகும் இதன் எரிபொருள் மிக அதிக எடை கொண்டதாக இருப்பதால் இது மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும்போது சாதாரண விஷயமாக இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதை அழகாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதித்துள்ளது.

SpaceX catches Starship booster

இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது அதை பிடிப்பதற்காக பிரம்மாண்ட கை போன்ற அமைப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியிருந்தது. இது ராக்கெட் வரும்போது நான் கைகளில் பங்கை பிடிப்பது போல இது ராக்கெட்டை பிடித்துக் கொள்ளும் இதனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ராக்கெட் பூமியில் மந்திரம் இந்த கைபோன்ற அமைப்புக்கு சாப்ஸ்டிக்ஸ் என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

இப்படியாக விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் பத்திரமாக பூமிக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல புவியீர்ப்பு வீசைக்கு எதிராக ராக்கெட் மெல்ல மெல்ல வந்து பூமியை அடைய வேண்டும். அதற்கு ஏற்றார் போல் அனைத்து பகுதிகளிலும் இன்ஜின் திறம்பட செயல்பட வேண்டும். இது எல்லாம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சாதித்து காட்டியுள்ளது. இதற்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்த சோதனைகளில் திட்டமிட்டபடி இந்த லேண்டிங் நடக்கவில்லை. தற்போது வெற்றிகரமாக நடந்துள்ளது.

இஸ்ரோவும் இதே போன்ற விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் இஸ்ரோ மிகக் குறைவான செலவில் இந்த திட்டத்தை செய்வதற்காக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. இது ராக்கெட் போல அல்லாமல் விமானம் போல லேண்டிங் செய்வது போல நடத்த திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பூமியிலிருந்து ஒரு வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி விட்டு அதை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது என்பது அறிவியல் உலகில் மிகப்பெரிய அதிசயமான விஷயம் தான். இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதித்துள்ளது. அறிவியல் துறையில் இந்த உலகம் எவ்வளவு வளர்ந்து வருகிறது. என்பதை இது காட்டுகிறது. தொடர்ந்து மற்ற நாடுகளும் இது தொழிற்நுட்பத்தை சோதனை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 13:46 [IST]
English summary
Spacex catches starship booster returns launch tower arms
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X