மணிக்கு 180 கிமீ வேகம்... இரண்டாம் கட்ட டால்கோ ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது!

By Saravana Rajan

மதுரா- பல்வால் இடையில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் டால்கோ ரயிலை இயக்கிப் பார்ப்பதற்கான சோதனை ஓட்டம் துவங்கப்பட்டிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை துவங்கியிருக்கும் இந்த சோதனை ஓட்டத்தை பல படிகளாக வேகத்தை அதிகரித்து ஆய்வுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்சமான வேக இலக்காக கொண்டு நடத்தப்படும் சோதனை ஓட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது.

வேக இலக்கு

வேக இலக்கு

முதல் கட்டமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் டால்கோ ரயில் இயக்கி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மணிக்கு 180 கிமீ வேகம் என்ற புதிய இலக்குடன் டால்கோ ரயிலின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் துவங்கியிருக்கிறது. இதுதான், இந்தியாவின் அதிவேக ரயில் சோதனை ஓட்டமாக குறிப்பிடப்படுகிறது.

வழித்தட விபரம்

வழித்தட விபரம்

கடந்த சனிக்கிழமை முதல் டெல்லி- ஆக்ரா வழித்தடத்தில் அமைந்திருக்கும் மதுரா- பல்வால் ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்குள் இந்த இரண்டாம் கட்ட சோதனை ஓட்டங்கள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 120 கிமீ வேகத்தில் டால்கோ ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டது. இந்த வேகத்தை படிப்படியாக மணிக்கு 180 கிமீ வேகம் என்ற இலக்குடன் இந்த இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகிறது.

 நேரம்

நேரம்

மதுரா- பல்வால் இடையிலான 84 கிமீ தூரத்தை டால்கோ ரயில் சோதனையின்போது 53 நிமிடங்களில் கடந்தது. வரும் சோதனை ஓட்டங்களின்போது வேகம் அதிகரிக்கப்படும் என்பதால், சராசரி பயண நேரம் வெகுவாக குறையும்.

 விசேஷ அனுமதி

விசேஷ அனுமதி

இந்தியாவில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், டால்கோ ரயிலை மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்குவதற்காக விசேஷ அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, முதல்கட்ட சோதனையில் திருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே, இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

 சிறப்பம்சம்

சிறப்பம்சம்

ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயில் பெட்டிகள் விசேஷ ஆக்சில் அமைப்பு கொண்டது. இதனால், வளைவுகளில் ரயில் திரும்பும்போது வேகத்தை குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலமாக, சராசரி பயண நேரம் வெகுவாக குறையும் என்பதுடன், மின்சார செலவும் 30 சதவீதம் வரை குறையும்.

ரயில் எஞ்சின்

ரயில் எஞ்சின்

முதல்கட்ட சோதனையின்போது பயன்படுத்தப்பட்ட அதே WDP-4 டீசல் எஞ்சின்தான் இரண்டாம் கட்ட சோதனையின்போதும் டால்கோ ரயிலை இழுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அதிசக்திவாய்ந்த டீசல் ரயில் எஞ்சின்களில் இதுவும் ஒன்று.

இலவசம்

இலவசம்

தற்போது சோதனைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனம் இலவசமாக வழங்கியிருக்கிறது. சோதனைகள் வெற்றியடையும்பட்சத்தில், அதிக அளவில் டால்கோ ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.

புதிய அத்தியாயம்

புதிய அத்தியாயம்

மூன்றாம் கட்டமாக மணிக்கு 200 கிமீ வேகம் வரை டால்கோ ரயிலை இயக்கிப் பார்க்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த சோதனைகளில் திருப்தி ஏற்பட்டால், டெல்லி- மும்பை இடையிலான வழித்தடத்தில் டால்கோ ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பயண நேரம்

பயண நேரம்

ராஜ்தானி ரயில்கள் சராசரியாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கின்றன. ஆனால், டால்கோ ரயில்கள் சராசரியாக மணிக்கு 125 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறையும்.

பயணிகள் ஆவல்

பயணிகள் ஆவல்

உதாரணத்திற்கு டெல்லி- மும்பை இடையே இடையிலான 1,384 கிமீ தூரத்தை ராஜ்தானி ரயில்கள் 17 மணி நேரத்தில் கடக்கின்றன. ஆனால், டால்கோ ரயில்கள் 12 மணி நேரத்திலேயே இரு நகரங்களையும் இணைத்துவிடும். இதனால், நீண்ட தூர பயணிகள் மத்தியில் டால்கோ ரயில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

விலை குறைவு

விலை குறைவு

தற்போது ராஜ்தானி ரயில்களில் பயன்படுத்தப்படும் LHB என்ற உயர்வகை ரயில் பெட்டிகள் விலை அதிகமாக இருக்கிறது. ஒரு பெட்டியின் விலை ரூ.2.75 கோடியாக இருக்கிறது. அதுவே, டால்கோ ரயில் பெட்டிகள் ரூ.1.70 கோடியாக இருக்கும். இதன்மூலமாக, ஒரு பெட்டிக்கு ரூ.1 கோடி வரை ரயில்வே துறைக்கு மிச்சம் ஏற்படும்.

டால்கோ ரயிலை இழுத்துச் செல்லும் WDP-4 டீசல் ரயில் எஞ்சினின் சிறப்புகள்!

டால்கோ ரயிலை இழுத்துச் செல்லும் WDP-4 டீசல் ரயில் எஞ்சினின் சிறப்புகள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Spanish Talgo trains begins second phase of trial In India.
Story first published: Monday, July 11, 2016, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X