சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இது அவருடைய ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் ஆகும். இந்த பட்ஜெட்டில் வாகன உலகம் சார்ந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, நாட்டின் பசுமை இயக்கம் சார்ந்து சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக கிடைக்க இருக்கும் பலன்கள் பற்றியும், 2023 பட்ஜெட்டில் வாகன உலகம் சார்ந்து அறிவிக்கப்பட்டு இருக்கும் முக்கிய அறிவிப்புகள் பற்றியுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உருவாக்க உதவும் மூல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டு வந்த சுங்க வரி நீக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலான சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பட்ஜெட்

பேட்டரி தயாரிக்கும் மூல பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு

இதில், லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிப்பதற்கான இறக்குமதி செய்யப்படும் மூல பொருட்கள் மீதான சுங்க வரி நீக்கப்பட்டு இருப்பது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களின் உற்பத்தி செலவு குறையும். இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை இப்போது இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு குறையக் கூடும். இதற்கான சூழலையே 2023 பட்ஜெட் உருவாக்கி இருக்கின்றது.

ஹைட்ரஜன் வாகனங்களுக்காக ஸ்பெஷல் திட்டம்

இத்துடன், மறைமுக வரி திட்டம் பற்றியும் நிர்மலா சீதாராமன் அவரது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இது நாட்டில் மின்சார வாகன உற்பத்தியையும், இயக்கத்தையும் பெருக்க செய்யும் என கூறினார். பேட்டரியை தயாரிக்கும் மூல பொருட்களுக்கான சுங்க வரி நீக்கப்பட்டதைப் போலவே, பேட்டரி உற்பத்திக்கு பயன்படும் எந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரியும் விலக்களிக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்களின் இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக பெரும் நிதியை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது.

பட்ஜெட்

பெருந்தொகை ஒதுக்கீடு

19 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறனை எட்டும் முயற்சியாகவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இந்தியாவின் பசுமை வாகன இயக்கத்தை நோக்கிய பயணத்தை மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. மேலும், 21 சதவீத்தில் இருந்து 13 சதவீதமாக ஆட்டோமொபைல்களுக்கான சுங்க வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.

வரி அதிகரிப்பு

இது வாகன விற்பனையை ஊக்குவிக்க பெரும் உதவியாக இருக்கும். அதேவேளையில், முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரியை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உயர்த்தி இருக்கின்றது. 60 சதவீதமாக இருந்த வரி 70 சதவீதமாக உயர்த்தியிருக்கின்றனர். இதனால், இறக்குமதி செய்யப்படும் சொகுசு மற்றும் மின்சார வாகனங்களின் விலை பல மடங்கு உயர இருக்கின்றது. இந்த தகவல் இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது, அவர்களை புலம்ப செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது என்றும் கூறலாம்.

பட்ஜெட்

புலம்ப வச்சுட்டாங்க

நாட்டில் தற்போது சொகுசு வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல அடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கான வரியை அரசு உயர்த்தி உள்ளது. ஆகையால், வரும் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனை பெருத்த அடியை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் விதமாக சில சிறப்பு திட்டங்களை அரசு அறிவித்து இருக்கின்றது.

பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றி ஸ்கிராப் செய்பவர்களுக்கு சிறப்பு நிதி வழங்க இருப்பதாக அவர் கூறி உள்ளார். மாநில அரசுகளின்கீழ் பயன்பாட்டில் இருக்கும் பழைய பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை ஸ்கிராப் செய்வதற்கு சிறப்பு ஆதரவை வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின்போதே வாகன ஸ்கிராப் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

ஃபேம் 2 பற்றி எந்த தகவலும் இல்ல

இந்த நிலையிலேயே கூடுதல் சிறப்பு நிதியை அவர் ஒதுக்கி இருக்கின்றார். அதேவேளையில், ஆட்டோமொபைல்ஸ் துறையின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான ஃபேம் 2 திட்டம் நீட்டிப்பு பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் 2024 மார்ச் உடன் காலாவதியாக இருக்கின்றது. எனவே இதை அரசு நீட்டித்தோ அல்லது புதிய மாற்றங்களைச் செய்தே மீண்டும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாலை பயன்படுத்துவோரை ஊக்குவிக்க பிளான்

இதில், அனைவருக்கும் தற்போது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இதுதவிர, சாலை உள்ளிட்ட போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் உருவாக்கப் போவதாகவும் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கின்றார். இத்துடன், ரயில்வே துறை மேம்பாட்டிற்காக ரூ. 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, புதிய ரயில் வழித்தட திட்டங்களுக்காக ரூ. 79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என இந்தியன் ரயில்வேஸ்க்காக பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், சேர்த்து நாட்டில் சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக சைக்கிள் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Special announcements for automobiles in budget 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X