அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை தொடங்கியுள்ளனர்.

Recommended Video

Maruti Alto K10 Launched At Rs 3.99 Lakh In TAMIL | What’s New On The Hatchback? Dual-Jet VVT & AMT

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் வாகன ஓட்டிகள் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனர். செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்வது ஆகிய விதிமுறை மீறல்களின் வரிசையில், பிரஷர் ஹாரன்களை பயன்படுத்துவது மற்றும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துவது ஆகிய தவறுகளையும் இந்தியர்கள் மிகவும் அதிகமாக செய்து வருகின்றனர்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

இந்த சூழலில், தங்கள் வாகனங்களில் பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு நடவடிக்கையை தற்போது தொடங்கியுள்ளதாக காவல் துறையினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். டெல்லி போக்குவரத்து காவல் துறையிடம் இருந்துதான் இந்த அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

இந்த சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பது குறித்த தகவலை, சமூக வலை தளங்கள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ''தங்கள் வாகனங்களில் பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துபவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்'' என டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் சமூக வலை தளங்களில் தெரிவித்துள்ளனர்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கூறுகையில், ''இதற்கு முன்பாகவும் கூட, தங்கள் வாகனங்களில் பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுதான் வந்தது.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் இனி இந்த நடவடிக்கை மிகவும் தீவிரமாக எடுக்கப்படும். அதாவது பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை தங்கள் வாகனங்களில் பயன்படுத்துபவர்கள் மீது இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துவர்களால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

எனவே அவர்களை கண்டறிந்து, கடுமையாக அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினோம். ஒலி மாசுபாடு காரணமாக மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது? என்பது தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

எனவேதான் பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதுடன் மட்டுமல்லாது, பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்தி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது? என்பது தொடர்பான விழிப்புணர்வையும் நாங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தவுள்ளோம்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

எனவே அவர்கள் பிரஷர் ஹாரன்கள் மற்றும் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்ட சைலென்சர்களை பயன்படுத்துவது குறையும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர். டெல்லி போக்குவரத்து காவல் துறையினரின் இந்த நடவடிக்கையை சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

அத்துடன் மற்ற பிரச்னைகளுக்கும், போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதன்படி சமூக வலை தள பயனர் ஒருவர் ''மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஹெட்லைட்களை பயன்படுத்துபவர்கள் மீதும், ஹை பீம்களை தவறாக பயன்படுத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பரிந்துரை செய்துள்ளார்.

அதிரடியை தொடங்கிய காவல் துறை... பொதுமக்கள் மத்தியிலேயே பாராட்டு குவிகிறது... காரணம் என்னனு தெரியுமா?

மற்றொரு சமூக வலை தள பயனரோ ''இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே சமயம் நடைபாதைகளில் வாகனங்களை இயக்குபவர்கள் மீதும், ராங் சைடில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும் போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்'' என தன்னுடைய கருத்தை, காவல் துறையினருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Article Published On: Sunday, August 21, 2022, 19:36 [IST]
English summary
Special drive against pressure horns and modified silencers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+