பிள்ளையார்னா சும்மாவா? எக்ஸ்பிரஸ்வேயில் தனி ரூட் கொடுத்த முதல்வர்! விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு ஏற்பாடா?
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மும்பை- புனே எக்ஸ்பிரஸ் வேயில் தனி லேனை விநாயகருக்காக ஒதுக்கியுள்ளனர். இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம்.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்நிலையில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எக்ஸ்பிரஸ் சாலையில் விநாயகருக்காகத் தனி லேன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாக்களில் மக்கள் குழுக்களாக இணைத்து ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இப்படியாக நடக்கும் வழிபாடுகள் முடிந்ததும் விநாயகரை விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இந்தியாவில் இப்படியாக விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் நடக்கும் விசர்ஜன ஊர்வலமும் பிரபலம் இந்த ஊர்வலத்தின் போது ஆங்காங்கே பிரச்சனைகளும் ஏற்படும்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழா இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் அதிகம் நடக்கும். இந்நிலையில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக அங்குள்ள பரபரப்பான எக்ஸ்பிரஸ் ஹைவேயில் ஒரு லேனை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக ஒதுக்கச் சொல்லி அம்மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஹைவே மொத்தம் 94.5 கி.மீ நீளம் கொண்டது. இந்தியாவிலேயே பரபரப்பான எக்ஸ்பிரஸ் ஹைவே இது தான். இதில் நாள் தோறும் குறைந்தது 60 ஆயிரம் வாகனங்களாவது பயணிக்கும். இது சாதாரண நாட்களில், பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். இந்நிலையில் இந்த பகுதி வந்த அம்மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தனியாக லேன் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த எக்ஸ்பிரஸ் ஹைவே நாம் முன்பு சொன்னது போல சாதாரணமாகவே மிகவும் பிஸியான ஹைவே தற்போது 6 லேன்கள் உள்ள நிலையில் இதை 8 லேன்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் இது திறக்கப்பட்ட கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 337 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 400 பேர் மரணமடைந்துள்ளனர்.

இவ்வளவு பிஸியான ஹைவேயில் போக்குவரத்து நெருக்கடியைக் கையாள்வது அரசுக்குச் சிக்கலாக இருந்து வருகிறது. இது போக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மேலும் நெருக்கடி அதிகமாகும் என்பதால் அதை ஒழுங்குபடுத்த அந்த பகுதியில் ஏகப்பட்ட காவலர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போக இந்த ஹைவேயில் மும்பை- பெங்களூரு மற்றும் மும்பை -கோவா ஆகிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் நெருக்கடிகளைத் தவிர்க்கக் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வரும் செப் 11ம் தேதி வரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளது. இதனால் வாகனங்கள் இலவசமாக அந்த சாலையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். என அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.

இது போக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காகப் போக்குவரத்துகள் மாற்றி விடப்பட்டுள்ளன. சாலைகள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்காகப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இது போல உங்கள் ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காகச் சாலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறித்து கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








