அபராதத்தில் இருந்து தப்பிக்க உதவும் செல்போன் செயலி! சக்சஸ்ஃபுல்லா பயன்படுத்தும் வாகன ஓட்டிகள்!
வாகன போக்குவரத்து விதிமீறல்கள்தான் பலவற்றிற்கு தொடக்க புள்ளியாக இருக்கின்றது. குறிப்பாக, விபத்து மற்றும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வாகன போக்குவரத்து விதிமீறல்களே மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, சில நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்களுக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் வழி வகுக்கின்றன. இதனால்தான் போக்குவரத்து விதிமீறல்கள் விஷயத்தில் காவல்துறையினர் கடும் கெடுபிடி காட்டுகின்றனர். இந்த நிலையே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தென்படுகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது.
அதேவேளையில், அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களிலும் நின்று போலீசாரால் போக்குவரத்து விதிமீறல்வாதிகளை களையெடுப்பது என்பது இயலாத ஒன்றாக இருக்கின்றது. இந்த விஷயத்திலேயே பெரும் உதவியாக இருக்கின்றன சாலையோர போக்குவரத்து கண்கானிப்பு கேமிராக்கள். முக்கியமான சாலைகளில் கேமிராவைப் பொருத்தி, அதன் வாயிலாக போக்குவரத்து விதிமீறல்களை களையெடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கேமிராக்களிண் கண்களிலும் இளைஞர்கள் சிலர் மண்ணை தூவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. அவற்றிடம் இருந்து தப்பிக்க இளைஞர்கள் செல்போன் செயலி ஒன்றையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த செயலி சாலையில் உள்ள போக்குவரத்து கண்கானிப்பு கேமிராக்களின் இருப்பை காட்டிக் கொடுக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.
இதன் வாயிலாக கேமிராக்களின் இருப்பை அறிந்து, அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் விதிமீறலில் ஈடுபடாமல் வாகன ஓட்டிகள் தப்பித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அதாவது, அபராதங்கள் மற்றும் எஃப்ஐஆர் போன்ற கடும் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தப்பி வருகின்றனர். குறிப்பாக, மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிலரே இந்த செயலியைப் பயன்படுத்தி கேமிராக்களிடம் இருந்து தப்பி வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலையில் அதிக வேகமாக பயணிக்கும் வாகனங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு அபராத செல்லாணை அனுப்பி வைக்கும் விதமாக ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கேமிராக்கள் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கூட எளிதில் கண்டறியும் திறன் கொண்டவை ஆகும்.
குறிப்பாக, மணிக்கு 80 கிமீ அல்லது அதற்கும் மேலான வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் வகையிலேயே இந்த கேமிரா வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைக் கண்டறிவதும் மிக சுலபம் ஆகும். இத்தகைய கேமிராவை பயன்படுத்தியே இந்த சாலையில் அதிக வேகத்தில் பயணிப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராத செல்லாண்களை வழங்கி வருகிறது காவல்துறை.
இந்த மாதிரியான சூழலிலேயே தேசிய நெடுஞ்சாலை 275-இல் எங்கு கேமிரா பொருத்தப்பட்டு இருக்கும் என்பதை முன்கூட்டியே காட்டும் செல்போன் செயலியைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகள் சிலர் அபராதத்தில் இருந்து தப்பி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் கேமிராக்கள் வரும் முன்னரே வாகனத்தின் வேகத்தை குறைத்து, அதற்கு பின்னர், கேமிராவைக் கடந்ததும் மீண்டும் அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே வரும் நாட்களில் இந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களை களையெடுக்க வேறு விதமான யுக்திகளை காவலர்கள் மேற்கொள்வார்கள் என தெரிகின்றது. இந்த நெடுஞ்சாலையில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஏஐ கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றின் கண்களிலேயே மண்ணை தூவி தப்பி வருகின்றனர் இளைஞர்கள் சிலர்.
இந்த கேமிராக்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொருத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக அதிக வேகத்தில் பயணிப்போர், திடீரென லேன்-ஐ மாற்றி பயணிப்போர் என பலதரப்பட்ட விதிமீறல் வாதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த செயலியைப் பயன்படுத்தி சில வாகன ஓட்டிகள் கேமிராவையும், காவலர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.
சமீப சில காலமாக இந்த நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணிப்போர் மீது அபராதத்துடன் சேர்த்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, மணிக்கு 130 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிப்போர் மீதே இத்தகைய கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த செயலியின் வாயிலாக பலர் தற்போது காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.
ஆனால், காவல்துறையை இந்த தகவல் வேதனைக்கு ஆளாக்கி இருக்கின்றது. வாகனங்கள் வேகமாக பயணிப்பதால் அதிகளவில் விபத்துகள் அரங்கேறும் சூழல் உருவாகி இருக்கின்றது. இதைத்தவிர்க்கவே அதிநவீன கேமிராக்கள் பெரும் பொருட் செலவில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், இதை அலட்சியமாக சிலர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றி வருவதாக வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விபத்து மற்றும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டே போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு, அதை மீறுவோர் மீது அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு சிலர் இந்த நடவடிக்கைகளில் தப்பி வருகின்றனர். இது அவர்களுக்கே பின்னாளில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் இவ்வாறு செய்துக் கொண்டிருக்கின்றனர்.
Source: starofmysore


Click it and Unblock the Notifications








