எச்சரிக்கை: 17 வயது மகனை கார் ஓட்ட அனுமதித்த பெற்றோரை சிறையில் அடைத்த காவல்துறை..!!
பெங்களூரில் 17 வயது இளைஞரை கார் ஓட்ட அனுமதித்த பெற்றோரை சிறையில் அடைத்தது போலீஸ்
பெங்களூரில் 17 வயதே ஆன மகனை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக அந்நகர போலீசார் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் 16, 17 வயதான மூன்று இளைஞர்கள் தங்களது தந்தைக்கு சொந்தமான மூன்று கார்களை ஓட்டி சென்றனர்.
அப்போது ஓசூர் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடக்க முயல்கையில், மூன்றில் ஒரு கார் பெரும்விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அர்ஃபான் என்ற 17 வயது இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டி சம்பவம் இடத்திலேயே உயிரழந்தார்.

அர்ஃபானுடன் மற்ற கார்களில் ஓட்டிக்கொண்டு சென்ற அவரது நண்பர்களான ஸ்ரீனிவாஸ், அனிருத் என்ற 16 வயது நிரம்பிய இளைஞர்கள் இந்த விபத்தில் தப்பித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து உதவி ஆணையாளர் ஆர். ஹிதேந்திரா நடத்திய விசாரணையில்,
மூன்று கார்களை ஓட்டி சென்ற இந்த இளைஞர்கள் மூவரும் மைனர் என்பதால், அவரவர் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வரவழைத்தார்.

மூன்று கார்களை ஓட்டி சென்ற இந்த இளைஞர்கள் மூவரும் மைனர் என்பதால், அவரவர் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வரவழைத்தார்.

இளைஞர்கள் மூவரும் தனித்தனியே கார்களை ஓட்டி சென்றுள்ளனர். ஸ்ரீனிவாஸ் இன்னோவாவையும் , அனிருத் ஸ்விஃப்ட் டிசைர் காரையும் ஓட்டி சென்றுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த அர்ஃபான், ஸ்கோடா காரை ஓட்டி சென்றுள்ளார். சுமார் 140 கி.மீ வேகத்தில் இளைஞர்கள் தங்களது கார்களை ஓட்டியதாக தெரிகிறது.

ஓசூர் சாலையில் இருக்கும் ரூபனா அஹ்ரஹாரா பகுதியில் உள்ள மேம்பாலாத்தில் மூவரும் கார் ஓட்டி சென்ற போது, ஒருவரை ஒருவர் முந்தி சென்றும் இடித்துக்கொண்டும் கார் ஓட்டியுள்ளனர்.

ஸ்கோடாவை வேகமாக ஓட்டி சென்ற அர்ஃபான் முன்ன சென்ற காரை முந்த முயல, அது டிவைடரை இடித்து பெரும் சத்தத்துடன் நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

போக்குவரத்து உதவி ஆணையர் ஆர். ஹிதேந்திரா விபத்தை ஏற்படுத்திய மற்ற இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே சட்ட விதி 184-ன் கீழ் 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், அவரது பெற்றோர்களை கைது செய்யும் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








