கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட்டை மிஞ்சும் ஷாக் வீடியோ!

மரண பயத்தை காட்டும் வகையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஒவ்வொரு மாநிலமும் அதன் வாசல்களை அடைத்துவிட்டன. மேலும், மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அவ்வப்போது அரசும், போலீஸாரும் எச்சரித்து வருகின்றனர்.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

இருப்பினும், அரசின் நோக்கத்தை சீர்குலைக்கும் விதமாக ஒரு சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரந்த வண்ணம் இருக்கின்றனர். அத்தகையோரை கண்கானிக்கும் விதமாக போலீஸார் நகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ரோந்து மற்றும் தடுப்புகளை (பேரிகேட்டுகள்) அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

குறிப்பாக நகர்ப்புறங்களில் குறைந்தது 100 அல்லது 200 அடிகளுக்கு ஒரு தடுப்புகளைப் போட்டு போலீஸார் தீவிர கண்கானிப்பு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸாரின் இந்த பேரிகேட் தடுப்புகளை சீறிப் பாய்ந்து வரும் கார் ஒன்று அடித்து தூக்குவதைப் போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

அதிவேகமாக வந்த காரை தடுப்பதற்காக போலீஸார் தடுப்புகளைப் போடுவது மற்றும் கட்டையால் தாக்குவது என சில யுக்திகளை மேற்கொண்டும் அந்த கார் அசராமல் பறந்து செல்வதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது.

முதலில் சிவப்பு நிற பிளாஸ்டிக் பேரிகேட்டுகளை உடைத்துக் கொண்டு பறக்கும் அந்த சுசுகி டிசையர், மிக விரைவிலேயே அதாவது அடுத்த சில நூறு மீட்டர்களிலேயே அடுத்த பேரிகேட்டை முட்டி மோதிக் கொண்டு பறக்கின்றது.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

மேலும், சாலையோரத்தில் படுத்திருந்த நாய்களைக் கூட கண்டுகொள்ளமல் மனிதாபிமானமற்று வந்த வேகத்திலேயே அடித்து தூக்கியவாறு அந்த நபர் சென்றார். இதைப் பார்த்த போலீஸார் சாமார்த்தியமாக காரை நிப்பாட்டுவதற்காக பேரிகேட்டை காரின் முன்பு வீசினார். இதில் சிக்கிய கார் சில அடி தூரங்கள் சென்று நின்றது. ஆனால், அங்கு போலீஸார் செல்வதற்குள்ளாக அந்த கார் மீண்டும் பறக்க ஆரம்பித்துவிட்டது.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

இருப்பினும், விடாப்பிடியாக விரட்டிச் சென்ற போலீஸார். மிருகத் தனமாக செயல்பட்ட அந்த நபரை காருடன் வளைத்து மடக்கிப் பிடித்தனர். இந்த மோசமான சம்பவத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த சில நாட்டு நாய்கள் கொள்ளப்பட்டன. பார்ப்போரை ஒரு நிமிடம் உரையச் செய்கின் அளவிற்கு இருக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் சின்ட்வரா பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீஸார் கைது செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அவர் மஹாராஷ்டிராவில் இருந்து உபி-யில் உள்ள அவரது வீட்டை நோக்கி வருகையிலேயே இப்படி கண்மூடித் தனமான செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த கடுமையான குற்றத்திற்காக பல பிரிவுகளின்கீழ் போலீஸார் அவர்மீது வழக்கு பதிந்துள்ளனர்.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

குறிப்பாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியது, 144 தடையை மீறியது, அதிகவேகமாக காரை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அவர் மீது பாய்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு தேசிய அளவிலான முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், இதனை தங்களுக்கு விடுமுறை அளித்திருப்பதாக சிலர் எண்ணிக் கொண்டு ஜாலி ரைடு சென்றவாறு இருக்கின்றனர்.

கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து தூக்கிய நபர்.. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்.. அதிர வைக்கும் வீடியோ!

இதுபோன்ற நபர்களால் அரசின் நோக்கம் சீர்குலைவதுடன், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையில் மத்திய, மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன. இதற்காக சில சிறப்பு சட்டங்கள் விரைவில் அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

அதேசமயம், ஏற்கனவே சில மாநில அரசுகள் விதிமீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள எடுக்க ஆரம்பித்துவிட்டன. அபராதம் வசூலிப்பது மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனைக் காட்டிலும் மிக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மிக விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 6, 2020, 17:59 [IST]
English summary
Speedy Car Breaks Police Barricades In MP. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+