8வது சூப்பர் காரை வாங்கிய இந்திய பணக்காரர்.. அந்த ஊரை சேர்ந்தவரா இவரு? அம்பானிக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே!

கேரளாவைச் சேர்ந்த விஜு ஜேகப், இவரே தன்னுடைய கார் கலெக்சனில் எட்டாவது சூப்பர் காரை இணைத்தவர் ஆவார். கேரளாவைச் சேர்ந்த இந்த தொழிலதிபர் தற்போது ஃபெர்ராரி ரோமா (Ferrari Roma) சூப்பர் காரையே வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் இந்திய மதிப்பு மட்டும் ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். தன்னுடைய இந்த கொள்முதலை விஜு ஜேக்கப் தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்பைஸ் கிங்-ஆக விஜு ஜேகப் அறியப்படுகின்றார்.

சிந்தைட் இன்ஸ்ட்ரீஸின் செயல் தலைவர் இவரே ஆவார். இவரிடத்தில் ஏற்கனவே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 மற்றும் போர்ஷே பனமேரா போன்ற பல அரிய வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே எட்டாவதாக ஃபெர்ராரி ரோமா காரை அவர் வாங்கி இருக்கின்றார்.

Spice king buys ferrari roma

இந்த கார் பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். முகேஷ் அம்பானிகூட இந்த காரை வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக முகேஷ் அம்பானியன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, முகேஷ் அம்பானியன் கான்வாயிலும் இந்த கார் அதன் தரிசனைத்தை வழங்கியது.

இந்த நிலையிலேயே ஸ்பைஸ் கிங் என்று அழைக்கப்புடம் விஜு ஜேக்கப் ஃபெர்ராரி ரோமா காரை இந்தியாவில் வாங்கி இருக்கின்றார். ஃபெர்ராரி நிறுவனம், இந்த ரோமா காரை 2021 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது. ஆனால், இப்போதே இந்தியர்கள் இந்த காரை ஆர்வமுடன் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

மிக சமீபத்தில் சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்கூட இந்த காரை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களைத் தொடர்ந்து இன்னும் சிலரும் ஃபெர்ராரி ரோமாவை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபெராரி ரோமா சூப்பர் காரில் 3.9 லிட்டர் டர்போசார்ஜட் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 612 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க் ஆற்றல்களை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்படுகின்றது. மேலும், ஃபெர்ராரி ரோமாவின் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும்.

இந்த காரால் வெறும் 3.4 செகண்டுகளிலே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட முடியும். இதேபோல், மணிக்கு 200 கிமீ வேகத்தை வெறும் 9.3 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் காரே ஃபெர்ராரி ரோமா ஆகும்.

இத்தகைய காரையே விஜு ஜேக்கப் தற்போது தன்னுடைய சூப்பரான கார் கலெக்சனில் புதிதாக இணைத்திருக்கின்றார். அவரிடத்தில் இதுபோன்று இன்னும் பல விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எம்340ஐ, பிஎம்டபிள்யூ எம்2 காம்பெடிசன், மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்எம், போர்ஷே பனமேரா எஸ் போன்ற ஏகப்பட்ட கார்களைப் பயன்படுத்தி வருகின்றார்.

இது ஒவ்வொன்றின் விலையும் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிகப் பெரிய கார் கலெக்சனைக் கொண்டிருப்பதை வைத்து பார்க்கையில் விஜு ஜேக்கப் இந்தியாவின் மற்ற பணக்காரர்களைப் போலவே இவரும் மிகப் பெரிய கார் காதலர் என்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிக திறனை வெளியேற்றும் கார் மாடலாக ஃபெர்ராரி ரோமா காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. தொடர்ச்சியாக இந்த காரை மிகுந்த செல்வந்தர்கள் வாங்கிக் கொண்டிருப்பதே இதற்கு சான்றாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 15:38 [IST]
English summary
Spice king viju jacob adds ferrari roma to his collection
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+