ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி!

ட்ரோன் மூலம் பார்சல்களை டெலிவிரி செய்வதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது பார்சல் டெலிவிரி பணிகளை புதிய அத்யாயத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

நாட்டின் குறைவான கட்டண விமானப் போக்குவரத்து சேவையை வழங்குவதில் ஸ்பைஸ்ஜெட் சிறந்து விளங்குகிறது. பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, பார்சல் அனுப்பும் சேவையை தனது ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ் என்ற பிரிவு மூலமாக மேற்கொண்டு வருகிறது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

இந்த நிலையில், விமானத்தின் மூலமாக பார்சல் அனுப்புவது மட்டுமின்றி, தொலைதூர பகுதிகளுக்கும் பார்சல் சேவையை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

அதன்படி, ட்ரோன் எனப்படும் சிறிய வகை பறக்கும் வாகனங்கள் மூலமாக பார்சல்களை தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக கொண்டு சேர்ப்பதற்கான திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஆர்டர் செய்யப்படும் மருத்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்த திட்டத்தின் மூலமாக விரைவாக கொண்டு சேர்க்க முடியும் என்று ஸ்பைஸ்ஜெட் கருதுகிறது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

மேலும், இந்த பார்சல் சேவைக்காக ட்ரோன்களை இயக்குவதற்காக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்றிருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். பரீட்சார்த்த முறையில் இந்த ட்ரோன்களை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட உள்ளது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

இந்த புதிய திட்டத்தின் மூலமாக மிக விரைவான பார்சல் சர்வீஸ் சேவேயை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதேபோன்று, பார்சல்களை அனுப்புவதற்கான செலவு வெகுவாக குறையும் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

இந்த புதிய திட்டத்தை ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான த்ராட்டில் ஏரோஸ்பேஸ், அயியோலாஜிக் சாஃப்ட்வேர் நிறுவனம், விமானங்கள் மோதுவதை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை வழங்கும் இன்வோலியா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ட்ரோன் பார்சர் சேவை திட்டத்தை சோதனை செய்ய இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

ட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... ஸ்பைஸ்ஜெட் ரெடி!

இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இது பார்சர் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் வெகு சீக்கிரமே உருவாகும் என்று ஸ்பைஸ்ஜெட் நம்புகிறது.

Most Read Articles
English summary
Low-cost airliner, SpiceJet has received DGCA permission for drone parcel delivery of essential goods in remote Areas.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X