ஸ்பைடர் மேனாவே இருந்தாலும் அந்த ஊர்ல இதை பண்ணிதான் ஆகணும்! வீடியோவ கண் சிமிட்டாமல் பார்க்கும் நெட்டிசன்கள்!

இந்தியாவின் ஐடி தலைநகரமான பெங்களூர் (Bangalore) புதுமையான விஷயங்களுக்கு பெயர் பெற்றது. கலாச்சாரம், உடை மற்றும் பழக்க வழக்கங்கள் என எந்த விஷயத்தை எடுத்து கொண்டாலும், பெங்களூரில் புதுமைகளை காணலாம். அப்படி பெங்களூரில் நடக்கும் புதுமையான விஷயங்களின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆவதுண்டு.

இந்த வரிசையில் தற்போது ஒரு வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் 2 பேர் ஒரு பைக்கில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் முன்னால் அமர்ந்திருப்பவர் வழக்கமான உடை அணிந்துள்ளார். ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவரோ, ஸ்பைடர் மேன் (Spider Man) போன்று உடை அணிந்துள்ளார். ஸ்பைடர் மேன் போன்ற உடைதான், இந்த வீடியோ வைரலாகி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம். பைக்கில் பயணம் செய்த அந்த 2 பேரும், வீடியோ எடுப்பவரை பார்த்து, தம்ஸ் அப் சைகை காட்டி விட்டு தொடர்ந்து பயணம் செய்கின்றனர்.

Spider Man In Bangalore

பெங்களூரின் ஜே.பி. நகர் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவை பார்க்கும் பலரும் வேடிக்கையான பல்வேறு கமெண்ட்களை செய்து வருகின்றனர். ''ஸ்பைடர் மேன் ரேபிடோ பைக் டாக்ஸி (Rapido Bike Taxi) மூலம் பயணம் செய்கிறார்'' என்பது போன்ற கமெண்ட்களை பலரும் ஜாலியாக செய்து கொண்டுள்ளனர்.

இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது ஹெல்மெட் (Helmet). இந்த வீடியோவில் நாம் காணும் 2 பேருமே ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்கின்றனர். இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.

Helmet

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் 2 பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான் இந்தியாவில் உள்ள விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை பலரும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக சென்னை (Chennai) உள்பட தமிழ்நாட்டின் (Tamil Nadu) பல்வேறு பகுதிகளிலும், ஹெல்மெட் விதிமுறையை வாகன ஓட்டிகள் நிறைய பேர் காற்றில் பறக்க விட்டு கொண்டுள்ளனர். ஆனால் பெங்களூர் நகரில் அப்படி கிடையாது. பெங்களூரில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிகின்றனர். தற்போது வைரலாக பரவி வருகின்ற வீடியோவில் நாம் அதைதான் பார்க்கிறோம்.

ஆனால் பின்னால் அமர்ந்துள்ள ஸ்பைடர் மேன் போன்ற உடை அணிந்த நபர் தலையில் அணிந்துள்ள ஹெல்மெட் பாதுகாப்பானதாக இருக்குமா? என்பது சந்தேகமே. ஏதோ பெயருக்காக அவர் ஹெல்மெட் அணிந்திருப்பதை போல் தெரிகிறது. ஏனெனில் இந்த வகையான ஹெல்மெட்கள் முழுமையான பாதுகாப்பை வழங்காது.

எனவே பெயருக்காக ஹெல்மெட் அணியாமல், தரமான ஹெல்மெட்டை அணிய வேண்டும். அப்போதுதான் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது, முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். இந்த வீடியோவில் 2 நபர்களும் பயணம் செய்யும் பைக் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் (BMW G 310 R) போல் தெரிகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த பைக்கின் விலை 2.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே கூறியபடி பெங்களூர் நகரம் புதுமையான விஷயங்களுக்கு பெயர் பெற்றது. பெங்களூர் நகர சாலைகளில் பெண்கள் போன்று உடை அணிந்த ஆண்களை கூட காண முடியும். எனவே ஸ்பைடர் மேன் போன்ற உடை அணிந்த நபர்களை பார்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 14:05 [IST]
English summary
Spider man in bangalore video of man riding pillion in garden city goes viral
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+