3 மணிநேரத்தில் லண்டன் டு நியூயார்க்... புதிய சூப்பர்சானிக் ஜெட் விமானம்!

Written By:

மூன்றே மணி நேரத்தில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் புதிய பயணிகள் விமானம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த ஸ்பைக் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் இந்த புதிய சூப்பர்சானிக் ரக பயணிகள் விமானத்தை வடிவமைத்துள்ளது. சூப்பர்சானிக் ரகத்தில் முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையுடன் வரும் இந்த புதிய விமானத்தை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 தனிநபர் பயன்பாட்டு விமானம்

தனிநபர் பயன்பாட்டு விமானம்

ஸ்பைக் எஸ்-512 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய பயணிகள் விமானம் வியாபார தொடர்பாக அடிக்கடி வெளிநாடு செல்லும் பெரும் பணக்காரர்களுக்கான சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரம்

பயண நேரம்

இரட்டை எஞ்சின் கொண்ட இந்த சூப்பர்சானிக் விமானம் பயண நேரத்தை பாதியாக குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, லண்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு செல்லும் விமானங்களின் பயண நேரம் 6 முதல் 7 மணிநேரமாக இருக்கிறது. ஆனால், இந்த விமானத்தில் மூன்றே மணி நேரத்தில் சென்றுவிடலாமாம்.

வடிவம்

வடிவம்

131 அடி நீளம், 60 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இதன் கான்செப்ட்டில் தற்போது வால் மற்றும் இறக்கை பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

 வசதிகள்

வசதிகள்

இந்த சூப்பர்சானிக் விமானம் பெரும் பணக்காரர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால், பல நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. 18 பேர் அமர்ந்து செல்வதற்கான நவீன இருக்கை அமைப்பு, ஜன்னலுக்கு பதிலாக டிஜிட்டல் திரை போன்ற பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.

வேகம்

வேகம்

இந்த சூப்பர்சானிக் பயணிகள் விமானம் மாக் 1.8 என்ற வேகத்தில் பறக்கும். அதாவது, மணிக்கு 2,205 கிமீ என்ற அதிகபட்ச வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை எரிபொருள் நிரப்பும்போது இடைநில்லாமல் 7,400 கிமீ தூரம் வரை பறக்கக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

 டெலிவிரி

டெலிவிரி

2018ம் ஆண்டு முதல் இந்த புதிய விமானத்தை டெலிவிரி கொடுக்க ஸ்பைக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 விலை

விலை

60 மில்லியன் டாலர் முதல் 80 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Imagine being able to jump on a plane that can get you from New York to London in just three short hours. This dream could soon become a reality thanks to Spike Aerospace’s S-512 Supersonic Jet.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark