என்னங்க விமானத்தை டேப் போட்டு ஒட்டுறீங்க... அவ்வளவு உயரத்துல பறக்கும்போது தாங்குமா? வைரல் வீடியோ!!

விமானத்தின் இறக்கையை ஊழியர் ஒருவர் டேப் (Tape)-ஐ கொண்டு சரி செய்துள்ள சம்பவம் இணையத்தில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இணையம் எந்த அளவிற்கு வேகமாக பிரபலமாகி உள்ளது என்றால், உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயம் கூட வேகமாக உலகின் மற்றொரு முனையில் உள்ளவர்களை சென்றடைந்து விடுகிறது. இதனால் சிறு சிறு சுவாரஸ்யமான விஷயங்கள் கூட பலரது பார்வையில் படுகிறது. அப்படித்தான், இங்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனது நிறுவனத்தின் விமான இறக்கையை டேப்பை கொண்டு சரி செய்துள்ளார்.

spirit airlines technician caught taping plane wings

இதனை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி டிக் டாக்கில் வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் டேக்-ஆஃப் ஆகுவதற்கு முன்பாக, விமானத்தின் இறக்கையில் இருந்த சிறு சேதத்தை சரி செய்வதற்காக இவ்வாறு டேப் ஒட்டப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணமான டென்னேஸ்ஸேவின் தலைநகர் நாஷ்வில்லேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வெவ்வேறான சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை டிக் டாக்கில் மட்டும் இதுவரையில் 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவில், விமானத்தின் இறக்கையின் அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊழியர் இருமுறை டேப் ஒட்டுவதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த வீடியோவை காட்சிப்படுத்திய நபர், "இதனால் தான் நான் ஸ்பிரிட்டில் பறப்பதில்லை.

விமானத்தில் இருக்கும் மக்கள் உங்களை பார்க்கவில்லை என நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்களா?" என கோபமாக தனது கருத்தை தெரிவிப்பதையும் கேட்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த மற்ற நெட்டிசன்களும் இதே கருத்தை தான் தெரிவிக்கின்றனர். அதேநேரம் சிலர், "இது ஆயில் உள்ளிட்ட திரவங்கள் கசிவதை தடுக்கும் டேப் அல்ல, ஸ்பீடு டேப். விமானங்களில் மிகவும் சிறிய பழுதுகளை சரி செய்ய பயன்படுத்தப்படுவது" என கூறுவதையும் பார்க்க முடிகிறது.

விமானங்களில் ஸ்பீடு டேப் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றே. சிறு சிறு பழுதுகளை மறைக்கவும், பாதிப்பு அதிகமாக ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. விமானம் அதிவேகத்தில் இயங்கும் போதிலும், பெயர்ந்து கொள்ளாமல் இருப்பதாலேயே இவை ஸ்பீடு டேப் எனப்படுகின்றன. இவற்றால் -65 டிகிரி எனும் கடும் குளிரில் இருந்து 600 டிகிரி என மனிதனால் தாங்கி கொள்ளவே முடியாத வெப்பநிலையிலும் நீடித்து உழைக்க முடியும்.

spirit airlines technician caught taping plane wings

ஸ்பிரிட் ஏர்லைன்ஸை பொறுத்தவரையில், இது அமெரிக்காவில் மிகவும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது. இதன் காரணமாகவே ஸ்பிரிட்டின் விமான சேவை தரமானதாக இருக்காது என்கிற தவறான கருத்து அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளது. அமெரிக்காவில் மியாமியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸின் விமானங்கள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் செயல்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வைரல் வீடியோக்கள் சில நேரங்களில் உண்மையை எளிதாக மறைத்துவிடுகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நிகழ்வாகும். குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்குவதினாலேயே அது தரமற்றதாக இருக்கும் என எண்ணுவது மிகவும் தவறு. நமது இந்தியாவிலும் கூட இண்டிகோ, கோ ஏர் போன்ற குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் நிறுவனங்கள் மீது இவ்வாறான தவறான கண்ணோட்டம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 29, 2023, 20:05 [IST]
English summary
Spirit airlines technician caught taping plane wings before takeoff
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+