ஒரு படம் கூட நடிக்காம கோயில் கட்ற அளவு தமிழ்நாட்டு ரசிகர்களை மயக்கிய நடிகை! 2 கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

தமிழ்நாட்டில் ஒரு சில நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில்க் ஸ்மிதா மற்றும் குஷ்பூ போன்ற நடிகைகளை, தமிழ்நாட்டு ரசிகர்கள் இன்னமும் கொண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காமல், ஒரு ரசிகை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்த அந்த நடிகை, தற்போதைய நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். எனினும் 23 வயதான அந்த நடிகை தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Sreeleela Spotted In Mercedes Benz S-Class

ஸ்ரீலீலாவை (Sreeleela) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். சிவகார்த்திக்கேயன் (Sivakarthikeyan) மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி (Parasakthi) திரைப்படத்தில் ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இதுதான் அவரது முதல் தமிழ் திரைப்படமாக இருக்க போகிறது.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டுதான் (2026) வெளியாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ஸ்ரீலீலாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. இந்த சூழலில், ஸ்ரீலீலாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Sreeleela

இந்த வைரல் வீடியோவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) காரில் ஸ்ரீலீலா பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் வயது முதிர்ந்த ஒரு பாட்டி உள்பட ரசிகர்கள் உடன் அவர் சிரித்த முகத்துடன் உரையாடுவதையும் நாம் காணலாம்.

ஸ்ரீலீலாவை சமீப காலமாக அடிக்கடி சொகுசு கார்களில் காண முடிகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) காரை ஸ்ரீலீலா பயன்படுத்தியதை காட்டும் வைரல் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலை தளங்களில் பரவியது. இந்த வரிசையில்தான் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை அவர் பயன்படுத்தும் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு செடான் (Luxury Sedan) ரக கார் ஆகும். இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.79 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.90 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக முறையே 2.25 கோடி ரூபாய் மற்றும் 2.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இது இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மற்றும் கரீனா கபூர் (Kareena Kapoor) போன்ற பிரபல நடிகைகள் பலரும், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ளனர். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில், பெட்ரோல், டீசல் என இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

அவை இரண்டுமே 3.0 லிட்டர் இன்ஜின்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பொதுவாக பெரும்பாலான சொகுசு கார்கள் இந்தியாவிற்கு முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆலையில், எஸ்-க்ளாஸ் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் விலை குறைவாக உள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலை இறக்குமதி செய்தால், விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் மற்ற பெரும்பாலான நடிகைகளை போலவே, ஸ்ரீலீலாவும் சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அவரிடம் ரேஞ்ச் ரோவர் (Range Rover) சொகுசு கார் ஒன்றும் உள்ளது. ஆனால் ஆரம்ப நாட்களில் இவர் மிகவும் எளிமையான கார்களைதான் பயன்படுத்தி கொண்டிருந்தார்.

அதாவது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) போன்ற கார்களைதான் ஸ்ரீலீலா பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வது, அவரது வளர்ச்சியை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 27, 2025, 22:53 [IST]
English summary
Sreeleela spotted in mercedes benz s class luxury sedan viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+