3 கோடி ரூபா கார்ல ஏறி போனது அவங்க பெத்த பொண்ணா! அம்மாவை அப்படியே உரிச்சு வெச்சிருக்காங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class). செயல்திறன் மற்றும் சொகுசு ஆகிய 2 அம்சங்களும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரின் ஆரம்ப விலையே 2.55 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை புது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரிடமும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் உள்ளது. மஹேந்திர சிங் டோனி (Mahendra Singh Dhoni), ஸ்ரேயாஸ் அய்யர் (Shreyas Iyer) மற்றும் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இதுதவிர தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை வைத்துள்ளனர். இதில், ஆனந்த் அம்பானி (Anant Ambani), பிருத்விராஜ் சுகுமாறன் (Prithviraj Sukumaran), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் சாரா அலி கான் (Sara Ali Khan) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இந்த வரிசையில் போனி கபூர் (Boney Kapoor) குடும்பத்திடமும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் (Sridevi) கணவரான போனி கபூர், மிகவும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

போனி கபூர்-ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மற்றும் குஷி கபூர் (Khushi Kapoor) ஆகியோரும் திரைத்துறையில்தான் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணியில் உள்ளனர். இதில், இளையவரான குஷி கபூரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.
யூடியூபில் (YouTube) பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரில் குஷி கபூர் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜிம்மில் இருந்து அவர் வீட்டிற்கு புறப்பட்டபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே வீடியோவில், மற்றொரு சந்தர்ப்பத்தில் குஷி கபூர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை காணும் நெட்சடின்கள் பலரும், குஷி கபூர் அப்படியே ஸ்ரீதேவியின் சாயலில் உள்ளதாக கூறி வருகின்றனர்.
மறுபக்கம் இந்த வீடியோவில் நாம் காண்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரின் ஏஎம்ஜி ஜி400டி (AMG G400d) வேரியண்ட் ஆகும். இதுதான் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 2.55 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.07 கோடி ரூபாய் வரும்.
இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 330 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) உள்ளிட்ட கார்களுடன், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் போட்டியிட்டு வருகிறது. இது ஆஃப்ரோடு சாகச பயணங்களுக்கு உகந்த கார்களில் ஒன்றாக திகழ்கிறது.
முரட்டுத்தனமான மற்றும் கம்பீரமான வெளிப்புற தோற்றத்தை கொண்டுள்ள இந்த கார், ஆஃப்ரோடு திறன்களில் தனித்துவமான ஒன்றாக உள்ளது. அத்துடன் இந்த காரில் சொகுசு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. எனவேதான் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே செயல்திறன் மற்றும் சொகுசு ஆகிய 2 அம்சங்களின் கலவை என இந்த காரை குறிப்பிட்டோம்.


Click it and Unblock the Notifications








