உங்க பெட்ரோலே வேணாம்... கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள், எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம்

இலங்கையில் கார்களை பயன்படுத்தும் மக்கள் கார்களை விட்டு விட்டு சைக்கிள்களை வாங்கத் துவங்கிவிட்டனர். இது குறித்த விரிவான செய்திகளைக் காணலாம் வாருங்கள்.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

உலகில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் இன்று பெட்ரோல் டீசல் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று எலெக்டரிக், ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களின் விற்பனை அதிகரித்தாலும் கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களில் சாலையில் பெரும்பாலும் இயங்குவதால் பெட்ரோல் டீசலுக்கு மட்டும் என் டிமாண்ட் குறையாது.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

இலங்கை நாடு தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது. இந்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இல்லை நேரடியாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்கிறது. இதற்காகப் பணத்தைக் கட்ட கட்ட அந்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும்.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

தற்போது அந்நாடு பெரிய அளவில் பொருளாதார இழப்பில் இருப்பதால் அந்நாட்டிற்கு பெட்ரோல் வழங்கிய பல நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசால் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் பெட்ரோல் டீசலை பல நிறுவனங்கள் இலங்கைக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சில அந்நாட்டிற்கு பெட்ரோல் அனுப்பும் சில நாடுகளில் குறிப்பிட்ட அளவு பெட்ரோல் மட்டுமே அனுப்ப முடியும்.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

இந்நிலையில் அந்நாட்டு அரசு மக்களுக்கு பெட்ரோலை விநியோகம் செய்ய ரேசன் முறையைப் பின்பற்றுகிறது. அதன்படி ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கு இவ்வளவு பெட்ரோல் தான் வழங்கப்படும் என டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வழங்கியவர்களுக்கு மட்டுமே பெட்ரோலும் வழங்கப்படுகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

தற்போது அந்நாட்டின் சேமிப்பு என்பது கிட்டதட்ட 0 ஆகிவிட்டது. இதனால் உர இறக்குமதி, உணவு மற்றும் மருந்து இறக்குமதி குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் ஒரு கப்பல் கூட பெட்ரோல், டீசல் இறக்குமதியைச் செய்யவில்லை. இதனால் அந்நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்கள் பெரும் போராட்ட வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகமாகியுள்ளது.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

இதனால் அந்நாட்டில் சாலையில் போக்குவரத்தே வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையே சமீபகாலமாக மாறிவருவதைப் பார்க்க முடிகிறது. மக்கள் போக்குவரத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டே வாழப் பழகிவிட்டனர். கார் வைத்திருந்த பலர் இருசக்கர வாகனத்திற்கு வந்துவிட்டனர். தினமும் பெட்ரோல் செலவைக் குறைக்க இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் நடக்கப் பழகிக் கொண்டனர்.

உங்க பெட்ரோலே வேணாம் . . . கார்களை கடாசிவிட்டு சைக்கிளுக்கு மாறும் மக்கள் . . . எல்லாத்துக்கும் இந்த அரசு தான் காரணம் . . . .

இதனால் இலங்கையில் உள்ள கார்கள் எல்லாம் இன்று கராஜ்களில் படுத்துத் தூங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் சைக்கிள் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது. பெட்ரோல்,டீசல் என எந்த எரிபொருளையும் பயன்படுத்தாமல் இயக்க முடியும் என்பதால் மக்கள் பலர் சைக்கிளை வாங்கத் துவங்கிவிட்டனர்.

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2022, 17:12 [IST]
English summary
Srilanka people starts buying bicycle puts cars in garages
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+