ரோந்துக்காக காஸ்ட்லி மோட்டார்சைக்கிள்களை வாங்கிய இலங்கை போலீசார்!

ரோந்து பணிக்காக உயர்ரக ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்களை இலங்கை போலீசார் வாங்கியுள்ளனர். அந்த மோட்டார்சைக்கிள்களை முறைப்படி பணியில் ஈடுபடுத்துவதற்கான விழா நேற்று கொழும்பு நகரில் நடந்தது.

மொத்தம் வாங்கப்பட்ட 315 மோட்டார்சைக்கிள்களில் 279 யமஹா மோட்டார்சைக்கிள்கள் போலீசாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து பணிகளிலும், சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு விரைந்து உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையிலும் இந்த மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட உள்ளன.

யமஹா பைக் மாடலையும், அதன் சிறப்புகளையும் ஸ்லைடரில் காணலாம்.

எந்த மாடல்

எந்த மாடல்

இலங்கை போலீசாருக்கு வழங்கப்பட்டிருக்கும் மாடல் யமஹாவின் எஃப்இசட்6 ஆர் என்ற நடுத்தர ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடலாகும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இலங்கை போலீசாருக்கு வழங்கப்பட்ட பைக் மாடலில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பேரிங் பேனல்கள் முழுமையாக கொடுக்கப்படவில்லை. பின்புற டிசைனிலும் சிறிது மாற்றங்களை செய்து போலீசாருக்கு தேவையான கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கை சைரன், விளக்குகளும் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 71 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 600சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கின் எஞ்சின் உள்கட்டமைப்பு உராய்வு குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இதில் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருப்பதால் ரோந்து பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

டயர்கள்

டயர்கள்

முன்புறத்தில் 120/70R அளவு கொண்ட 17 இஞ்ச் ரேடியல் டயரும், 160/60R 17 இஞ்ச் ரேடியல் டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

 பிரேக்

பிரேக்

முன்புறத்தில் 298 மிமீ விட்டம் கொண்ட இரட்டை டிஸ்க்குகள் கொண்ட பிரேக் அமைப்பும், பின்புறத்தில் 245மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளதால் மிகச்சிறப்பான நிறுத்தும் திறனை வழங்கும்.

ரைடிங் பொசிஷன்

ரைடிங் பொசிஷன்

இந்த பைக்கின் மிக முக்கிய சிறப்பம்சமாக அனைவராலும் கூறப்படுவது இதன் ரைடிங் பொசிஷன். இதன் இருக்கை அமைப்பு தரையிலிருந்து குறைவான உயரம் கொண்டதாக இருப்பது ஓட்டும்போது ரைடருக்கு அதிக நம்பிக்கை தரும்.

மதிப்பு

மதிப்பு

ஒவ்வொரு பைக்கும் இலங்கை மதிப்பில் 3 மில்லியன் ரூபாய் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2014, 11:43 [IST]
English summary
Sri Lanka’s police distributed 279 high powered motorcycles to their units across the country, at a ceremony in Colombo July 1, 2014. Many recipients were forced to beat a hasty retreat to avoid getting soaked in the rain as police chief N. K. Illangakoon pulled up at the venue in his limousine. Police said they bought a total of 315 Yamaha 600 cc Japanese-made motorcycles at a cost of 945 million rupees, or three million rupees each.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+