கேஜிஎஃப் படத்துல நடித்த நடிகைக்கா இந்த நிலைமை? ராக்கி பாயிடம் சொல்லியிருந்தா பென்ஸ் கார்களா குவிச்சு இருப்பாரே
டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த உலகின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு டொயோட்டா கார்களுக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் டொயோட்டா கார்களிலேயே மக்களை வெகுவாக கவர்ந்த கார் என்றால், அது இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta) ஆகும். பெரும் செல்வந்தர்கள் கூட குறைந்தது ஒரு டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரை ஆவது வைத்திருக்க விரும்புகின்றனர். அதாவது, இன்னோவாவை காட்டிலும் விலையுயர்ந்த கார்களை ஏற்கனவே வைத்திருப்பினும், இன்னோவாவை வாங்குவதை விரும்புகின்றனர்.
அந்த அளவிற்கு சிறப்பானவைகளாக விளங்கும் இன்னோவா கார்கள், பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளன. பவர்ஃபுல்லான என்ஜின் மட்டுமின்றி, அளவில் பெரியதான தோற்றமும், அதற்கேற்ப விசாலமான உட்புற இடவசதியும் தான் டொயோட்டா இன்னோவா கார்களின் சிறப்பம்சமாகும். ஆரம்பத்தில் இன்னோவா என்கிற பெயரில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார், பின்னர் இன்னோவா கிரிஸ்ட்டா என மாறியது.

அதன்பின், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்னோவா ஹைகிராஸ் (Hycross) என ஹைப்ரீட் (Hybrid) வெர்சனில் இன்னோவா கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் என இரு விதமான கார்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும் செல்வந்தர்களும் இன்னோவா கார்களை விரும்பி வாங்குகின்றனர் என பார்த்தால், சினிமா பிரபலங்களும் கூட இன்னோவா கிரிஸ்ட்டா காரை விரும்பி பயன்படுத்துகின்றனர்.
இதை ஏன் இப்போது கூறுகிறோம் என்றால், இந்திய அளவில் பிரபலமான திரைப்படம் ஒன்றில் நடித்த நடிகை ஒருவர் சர்வ சாதாரணமாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார் ஒன்றில் பயணம் செய்து, விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, விமான நிலையத்தின் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நடிகை வேறு யாருமில்லை, கேஜிஎஃப் (KGF) என்கிற பேன் இந்தியா திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த நடிகை ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி எனப்படும் ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) ஆவார். 2016ஆம் ஆண்டிற்கான 'மிஸ் சூப்பர்நேஷ்னல்' (Miss Supernational) அழகி பட்டத்தை பெற்றவரான ஸ்ரீநிதி ஷெட்டியின் நடிப்பில் இதுவரையில் 4 திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன.
இதிலிலும், கடைசி 4வது திரைப்படம் மிக சமீபத்தில்தான் திரைக்கு வந்தது. ஆனால், அதற்குள்ளாகவே தென்னிந்தியா முழுவதும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பிரபலமாகி உள்ளார். இதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த கேஜிஎஃப் திரைப்படங்களில் நடித்தது ஆகும். இன்னும் சொல்லப்போனால், கேஜிஎஃப் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் முதல் திரைப்படமாகும்.
அதன்பின், தமிழில் முதல் திரைப்படமாக நடிகர் விக்ரம் (Actor Vikram) உடன் 'கோப்ரா' (Cobra) திரைப்படத்தில் நடித்ததை பார்த்திருப்பீர்கள். தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துவரும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தனது முதல் தெலுங்கு திரைப்படமான 'ஹிட் 3' (Hit 3)-இன் விளம்பர நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்துக்கு சென்று பின்னர் மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி செல்வதற்காக டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரில் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
ஆக, இந்த இன்னோவா கிரிஸ்ட்டா கார் ஆனது ஸ்ரீநிதி ஷெட்டிக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்புகள் குறைவே. திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட காராக இது இருக்கலாம். இருப்பினும், திரைப்படத்தின் கதாநாயகியாக எந்தவொரு லக்சரி காரையும் போக்குவரத்துக்கு தயாரிப்பாளரிடம் கேட்கும் இடத்தில் இருந்துக் கொண்டு, சற்று விலை குறைவான இன்னோவா கிரிஸ்ட்டா காரில் ஸ்ரீநிதி ஷெட்டி சென்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சற்று விலை குறைவான கார் என்றதும், டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை மாருதி (Maruti) கார்கள் அளவிற்கு சில இலட்ச ரூபாய்களில் விலை கொண்ட கார் என நினைத்துவிட வேண்டாம். இன்னோவா கிரிஸ்ட்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.19.99 லட்சத்தில் இருந்து ரூ.26.82 லட்சம் வரையில் உள்ளன. இத்தனை லட்ச ரூபாய் மதிப்பிலான காராக இருப்பினும், பேன் இந்தியா திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் தரத்துக்கு சற்று குறைவே ஆகும்.


Click it and Unblock the Notifications








