காதலர் தின கொண்டாட்டம்... பிரபல நடிகைக்கு பிஎம்டபிள்யூ பைக்கை பரிசாக வழங்கிய கணவன்... விலை எவ்ளோனு தெரியுமா?
காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல நடிகைக்கு அவரது கணவர் பிஎம்டபிள்யூ பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 14) காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலையாள நடிகை பேர்லே மானேவிற்கு (Pearle Maaney), அவரது கணவர் ஸ்ரீனிஷ் அரவிந்த் (Srinish Aravind) பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். ஸ்ரீனிஷ் அரவிந்த் தனது மனைவி பேர்லே மானேவிற்கு வழங்கியிருப்பது பைக் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் (BMW G310R) பைக்கைதான் ஸ்ரீனிஷ் அரவிந்த் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவி பேர்லே மானேவிற்கு பரிசாக வழங்கியுள்ளார். இது இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்றாகும். பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விலை குறைவான பைக்குகளில் ஒன்று எனவும் இதனை கூறலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஸ்ட்ரீட் பைக் (Street Bike) ஆகும். இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 312.2 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூயல் இன்ஜெக்டட், லிக்யூட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் (BMW G310GS) பைக்கிலும் இதே இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்மில் 33.52 பிஹெச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் மற்றும் பின் பகுதிகளில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் வசதியையும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பெற்றுள்ளது. இந்த பைக்கின் எடை 164 கிலோ ஆகும்.

11 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கை பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் மற்றும் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களில், எல்இடி லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.

தமிழகத்தில் ஓசூரில் செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்துதான் சர்வதேச சந்தைகளுக்கு, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பா உள்பட பல்வேறு சந்தைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகள் விற்பனையாகி கொண்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள், ரைடு-பை-வயர் த்ராட்டில் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் விலை 2.65 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளும் பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின்ஸ் என செல்லமாக அழைக்கப்படுகின்றன.இந்த 2 பைக்குகளுமே ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக் ஹாலிவுட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும்.

அதுவும் மிஷன் இம்பாசிபில் 7 (Mission Impossible 7) திரைப்படத்தில் இந்த பைக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரபல நடிகரான டாம் க்ரூஸ் (Tom Cruise) இந்த திரைப்படத்தில் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கை ஓட்டியுள்ளார். மிஷன் இம்பாசிபில் வரிசை திரைப்படங்களில் கார் மற்றும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தில், அதுவும் டாம் க்ரூஸ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக்கை பயன்படுத்தியிருப்பது பெருமிதமான விஷயம்தான். இதற்கிடையே பிரபல தமிழ் இயக்குனரான வெற்றிமாறன் கூட சமீபத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக்கை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் (BMW R NineT Scrambler) பைக்கைதான் வெற்றிமாறன் தற்போது புதிதாக வாங்கியுள்ளார். சென்னையில் உள்ள ஷோரூம் ஒன்றில் அவர் இந்த பைக்கை டெலிவரி எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தென் இந்திய திரை பிரபலங்கள் பிஎம்டபிள்யூ பைக்குகள் மீது அதிக ஆர்வம் காட்டுவது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications








