விஜய் கூட ஒரு படம் நடிச்சதுக்கு அப்புறம் ஆளையே காணோம்! கருப்பு ட்ரெஸ், சிகப்பு காருக்கு காரணம் இதுதானா!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய 'டிமாண்ட்' உருவாகி விட்டது. செடான் ரக கார்களை (Sedan Cars) யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இருப்பினும் ஒரு சில சொகுசு செடான் கார்கள் (Luxury Sedan Cars) வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அப்படி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு செடான் ரக கார்களில் ஒன்றுதான் ஆடி ஏ4 (Audi A4).

கடந்த காலங்களில் தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia) இந்த சொகுசு செடான் காரில் பயணம் மேற்கொண்டதை நாம் பார்த்துள்ளோம். அத்துடன் ஷாருக்கான் (Shah Rukh Khan) மற்றும் சல்மான் கான் (Salman Khan) போன்ற உச்ச நட்சத்திரங்களிடமும், ஆடி ஏ4 சொகுசு செடான் கார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Priyanka Chopra Spotted In Audi A4

இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் ஆடி ஏ4 சொகுசு செடான் காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது சிகப்பு நிற ஆடி ஏ4 கார் ஆகும்.

இந்த காரில் பயணம் செய்த நடிகை தமிழ் திரையுலகில் இருந்துதான் தனது பயணத்தை தொடங்கினார். ஆனால் தற்போது பாலிவுட் (Bollywood) திரையுலகை கடந்து, ஹாலிவுட் (Hollywood) வரை சென்று விட்டார். பிரியங்கா சோப்ராவை (Priyanka Chopra) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

Audi A4

கடந்த 2002ம் ஆண்டு வெளியான தமிழன் (Thamizhan) திரைப்படத்தில், விஜய் (Vijay) உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இதுதான் பிரியங்கா சோப்ராவின் முதல் திரைப்படம். ஆனால் அதன் பின் ஒரு தமிழ் படத்தில் கூட பிரியங்கா சோப்ரா நடிக்கவில்லை. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் அவர் பிஸியாகி விட்டார்.

தற்போதைய நிலையில் எஸ்எஸ்எம்பி29 (SSMB29) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் தெலுங்கு திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து கொண்டுள்ளார். எஸ்.எஸ் ராஜமௌலி (S.S Rajamouli) இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், மகேஷ் பாபு (Mahesh Babu) உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 1,000 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்தாலும் கூட, பிரியங்கா சோப்ரா தற்போது பயணம் செய்தது ஓரளவிற்கு விலை குறைவான கார்தான். ஆம், இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ4 காரின் ஆரம்ப விலை 46.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 55.84 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான ஆடி கார்களில் ஒன்று என்ற பெருமையை ஏ4 கார் தன்வசம் வைத்துள்ளது.

ஆனால் பிரியங்கா சோப்ரா பயன்படுத்திய காரின் மதிப்பு இவ்வளவு இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் பயணம் செய்தது சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது இது கடந்த 2017ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். எனவே அந்த சமயத்தில் இதன் விலை இன்னும் குறைவாகவே இருந்திருக்கும்.

தற்போதைய நிலையில் ஆடி ஏ4 காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 204 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உடன் 12V ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் (BMW 2 Series) போன்ற கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரியங்கா சோப்ரா போன்ற திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில், ஆடி ஏ4 எளிமையான ஒரு கார்தான். இம்முறை அவர் எளிமையான ஒரு காரில் பயணம் செய்திருந்தாலும் கூட, உண்மையில் பிரியங்கா சோப்ராவின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் ஆடம்பரமானது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) போன்ற கார்கள் எல்லாம் பிரியங்கா சோப்ராவிடம் உள்ளன.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் பிரியங்கா சோப்ராவை கருப்பு நிற உடையுடன் சிகப்பு நிற காரில் காண முடிகிறது. இவை இரண்டுமே அவருக்கு மிகவும் பிடித்தமான நிறங்கள் ஆகும். எனவே பிரியங்கா சோப்ராவை அடிக்கடி கருப்பு மற்றும் சிகப்பு நிற கார்கள் மற்றும் உடையில் பார்க்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 15:13 [IST]
English summary
Ssmb29 actress priyanka chopra spotted in audi a4 luxury sedan viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+